தமிழ் வளர்ச்சிக்கு பங்காற்றிய 21 தமிழ் அறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கௌரவித்தார்.

தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் 2022-ம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை கலைவாணர் அரங்கல் நடைபெற்றது.  இதில் தமிழ் மொழி  மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும்,  தமிழ் சமுதாய உயர்வுக்கும் பங்காற்றிய தமிழறிஞர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  விருதுகளை வழங்கி கௌரவித்தார்.  தமிழறிஞர்கள், தமிழ் அமைப்புகள், மாத இதழ்  என மொத்தம் 21 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து யாருக்கு என்ன விருது என  கீழ்கண்ட விவரங்களில்:
1. திருவள்ளுவர் விருது 2022  : மீனாட்சி சுந்தரம் 
2. பேரறிஞர் அண்ணா விருது 2021 : நாஞ்சில் சம்பத்
3. பாவேந்தர் பாரதிதாசன் விருது 2021 : புலவர் செந்தலை கவுதமன்
4. செயலின் செல்வர் விருது 2021 : சூர்யா சேவியர்
5. இளங்கோவடிகள் விருது 2021 : நெல்லை கண்ணன்
6. மறைமலையடிகளார் விருது 2021 : சுகி.சிவம்
7. முதலமைச்சர் கணினி தமிழ் விருது 2021 : வ.தனலட்சுமி
8. தந்தை பெரியார் விருது 2021 : முனைவர்  க.திருநாவுக்கரசு
9. பெருந்தலைவர் காமராஜர் விருது 2021 : முனைவர் குமரி அனந்தன்
10. முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ விசுவநாதன் விருது 2021 : முனைவர் ம.ராசேந்திரன்
11. ஜி.யு போப் விருது 2021 : அ.சு பன்னீர் செல்வன்
12. தேவநேய பாவணர் விருது 2021 : முனைவர் கு.அரசேந்திரன்
13. அருட்பெருஞ்சோதி வள்ளலார் விருது - 2021 : முனைவர் இரா.சஞ்சீவிராயர்
14. தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது - 2021 : உயிர்மை (திங்களிதழ்) ஆசிரியர் எஸ்.அப்துல்ஹமீது (மனுஷ்யபுத்திரன்)
15. அண்ணல் அம்பேத்கர் விருது - 2021 : நீதியரசர் சந்துரு
16. மகாகவி பாரதியார் விருது - 2021 : பாரதி கிருஷ்ணகுமார்
17. கம்பர் விருது - 2021 : பாரதி பாஸ்கர்
18. உமறுப்புலவர் விருது - 2021 : நா.மம்மது
19. சிங்காரவேலர் விருது - 2021 : கவிஞர் மதுக்கூர் இராமலிங்கம்
20. அயோத்திதாசப் பண்டிதர் விருது - 2021: ஞான.அலாய்சியஸ்
21. தமிழ்த்தாய் விருது - 2021 : மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் மலேசியா

ஆகிய  விருதாளர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கான காசோலை  விருது தொகையாகவும்,  தங்கப் பதக்கமும் தகுதியுரையும் வழங்கி பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மேலும்   2021ம் ஆண்டிற்கான சி.பா.ஆதித்தனார் திங்களிதழ் விருது உயிர்மை திங்களிதழுக்கு வழங்கி விருது தொகையாக ரூ.2 லட்சம்,  தகுதியுரை, கேடயம், பொன்னாடை ஆகியவை வழங்கப்பட்டன.  இந்த தமிழறிஞர்கள் விருது வழங்கும்  விழாவில் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், அரசு உயர் அதிகாரிகள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் பங்கேற்றனர் குறிப்பிடத்தக்கது.