பெற்ற குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை.. திருச்சியில் நிகழ்ந்த சோகம்!

பெற்ற குழந்தையை கொன்று தாய் தூக்கிட்டு தற்கொலை..  திருச்சியில் நிகழ்ந்த சோகம்! - Daily news

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஒரு வயது குழந்தையை கொலைசெய்துவிட்டு, தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த காட்டூர் கொத்தமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் தினேஷ்குமார்.விவசாயி. இவருக்கு, உறவினரான சரண்யா இவருக்கு 28 வயதாகிறது,  அவருடன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 வயதில் மகளும், 1 வயதில் மகனும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக சரண்யாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதற்காக அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் முழுமையாக குணமடையவில்லை. இதனால் சரண்யா மனமுடைந்து காணப்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், சம்பவத்தன்று தினேஷ்குமார் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்காக புறப்பட்டு சென்ற நிலையில், மகளும் பள்ளிக்கு சென்று விட்டார். இதனால், சரண்யாவும், அவரது குழந்தை மட்டும் தனியே இருந்துள்ளனர். சிறிது நேரத்துக்கு பின் வீட்டிற்கு வந்த தினேஷ்குமார் கதவை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரமாகியும் கதவு திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர் வீட்டின் மேலே ஏறிச்சென்று, ஓட்டை பிரித்து பார்த்துள்ளார். அப்போது, சரண்யா மின்விசிறியில் தூக்கிட்ட நிலையிலும், கட்டிலில் ஆண் குழந்தை உயிரிழந்த நிலையிலும் சடலமாக கிடந்தனர். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த தினேஷ்குமார், கதறி அழுதார்.

மேலும் தகவல் அறிந்த லால்குடி போலீசார், இவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், சரண்யா குழந்தையை கழுத்தை நெரித்து கொன்றுவிட்டு, பின்னர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. எனினும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என தெரியவில்லை. மேலும்  இது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். தாயே குழந்தையை கொன்று தானும் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 

Leave a Comment