தனது மனைவி நடிகர் விஜய் ரசிகை என்பதால், அவரை நடிகர் விஜய்யுடன் தொடர்புபடுத்தி பேசியதுடன், தனது மகளிடம் தவறாக நடக்க முயன்ற போலீசார் ஒருவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தான், இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனது மனைவி மற்றும் 3 மகள்களுடன் வசித்து வருகிறார்.

அதே நேரத்தில், ராஜேந்திரன் அங்குள்ள காவல் நிலையத்தில் முதன்மை காவலராகவும் பணியாற்றி வந்தார். இவரது மனைவி பூர்ணிமா உடன், கடந்த 15 ஆண்டுகளுக்கு இவருக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது.

திருமணத்திற்கு பிறகு, ராஜேந்திரன் - பூர்ணிமா தம்பதிக்கு அடுத்தடுத்து 3 பெண் குழந்தைகள் பிறந்து உள்ளது.

ஒரு கட்டத்தில், போலீசான கணவன் ராஜேந்திரனுக்கு பல பெண்களிடம் தொடர்பு இருந்ததாகவும், அதை அவரது மனைி தட்டிக் கேட்டதால் அன்று முதல் மனைவி பூர்ணிமாவை, அவரது கணவன் ராஜேந்திரன் கொடுமைப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

குறிப்பாக, பூர்ணிமா நடிகர் விஜய்யின் ரசிகையாக இருந்திருக்கிறார். 

இதனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கணவன் வீட்டில் இல்லாத நேரம் பார்த்து, நடிகர் விஜய்யின் படத்தை பார்த்து உள்ளார். ஆனால், அந்த நேரம் அவரது கணவன் ராஜேந்திரன், திடீரென்று வீட்டிற்குள் வந்த நிலையில், மனைவி விஜய் படம் பார்த்திக்கொண்டிருப்பதைப் பார்த்து கடும் ஆத்திரமடைந்த உள்ளார்.

மேலும், “மனைவியை, நடிகர் விஜய்யுடன் தொடர்புபடுத்தி தவறாகவும், ஆபசமாகவும் பேசியதாகவும்” குற்றம்சாட்டப்படுகிறது. இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளான அவரது மனைவி பூர்ணிமா, வீட்டில் யாருடனும் எதுவும் பேசாமல் இருந்திருக்கிறார்.

இதனையடுத்து, “வீட்டில் உள்ள டிவியில், கார்ட்டூன் நிகழ்ச்சி மட்டுமே பார்க்க வேண்டும் என்றும், மற்றபடி சினிமா, சீரியல் எதுவும் பார்க்க கூடாது” என்றும், ராஜேந்திரன் மிக கடுமையான கண்டிசன் போட்டு வந்திருக்கிறார் என்றும், கூறப்படுகிறது.  

அத்துடன், தனது மனைவியை மட்டுமல்லாமல் தனது மகள்களையும் டிவி பார்க்கக்கூடாது என்றும், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் யாரிடமும் அதிகம் பேசக் கூடாது என்றும், அவர் அதிகமான கண்டிசன் போட்டு வந்திருக்கிறார் என்றும், குற்றம்சாட்டப்படுகிறது.

இப்படியாக, கணவன் ராஜேந்திரனின் செயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட அவரது மனைவி பூர்ணிமா, தொடர்ந்து 2 முறைக்கு தற்கொலைக்கு முயன்ற நிலையில், கடைசி நேரத்தில் காப்பாற்றப்பட்டிருக்கிறார். 

அதன் தொடர்ச்சியாக, கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி அன்று, “உன்னை விவாகரத்து செய்யப் போகிறேன்” என்று, அவரது கணவன் மிரட்டிய நிலையில், ஒரு பேப்பரில் கட்டாயப்படுத்தி கையெழுத்தும் பெற்றுக்கொண்டு, அவரது பெயரை மாற்றி “ராஜேந்திரன் பாஷா என்றும் சொல்லியிருக்கிறார்” என்கிற குற்றச்சாட்டும் எழுந்திருக்கிறது. இதனால், அவரது குடும்பத்தில் குழப்பங்களும் சண்டைகள் எழவே, அப்போதும், அவரது மனைவி பூர்ணிமாவை அவரது கணவன் ராஜேந்திரன், அடித்து துன்புறுத்தியிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

பின்னர் வெளியே சென்ற ராஜேந்திரன், இரவு நேரத்தில் கத்தியுடன் வீடு திரும்பிய நிலையில், தூங்கிக்கொண்டிருந்த மனைவி பூர்ணிமாவை வயிற்றில் குத்தி இருக்கிறார். 

அப்போது, அவரின் அலறல் சத்தம் கேட்டு, அவரது முத்த மகள் பத்மினி தனது தந்தையை தடுக்க முற்பட்டிருக்கிறார். ஆனால், தனது மகள் என்றும் பார்க்காமல் அவரிம் தவறாக நடக்க முயன்ற நிலையில், அவர் எதிர்ப்பு தெரிவிக்கவே, மகளையும் அவர் கத்தியால் குத்திக் விட்டு, அங்கிருந்து தப்பி ஓடி மீஞ்சூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்து இருக்கிறார்.  

இது தொடர்பாக தனது தந்தையான ராஜேந்திரன் பற்றி அவரது மூத்த மகள் பத்மினி, அவரது மாமாவிடம் “என் தந்தை ராஜேந்திரன் என்னிடம்  தவறாக பேசியதுடன், என்னிடம் தவறாக நடக்க முயன்றதாகவும்” குற்றம்சாட்டி இருக்கிறார். 

இதையடுத்து, தந்தை ராஜேந்திரன் மீது அம்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவரது மகள் மற்றும் மனைவி இருவரும் புகார் அளித்த நிலையில், போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து, போலீசான ரஜேந்திரனை சக போலீசார் அதிரடியாக கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.