பிரபல சீரியல் நடிகைக்கு விரைவில் திருமணம்...மாப்பிள்ளை யாருன்னு பாருங்க !
By Aravind Selvam | Galatta | November 25, 2021 17:22 PM IST
பிரபல மாடலாக அறிமுகமாகி பின்னர் சின்னத்திரையில் நடிகையாக பலர் கலக்கி வருகின்றனர்.அப்படி கன்னட சின்னத்திரையை கலக்கி வரும் ஒருவர் காவ்யா கௌடா.மாடலாக பெரிய வரவேற்பை பெற்றிருந்த இவர் அடுத்து சின்னத்திரையில் தனது என்ட்ரியை கொடுத்தார்.
கன்னடாவில் Vivaha,Gandhari உள்ளிட்ட தொடர்களில் நடித்து ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் காவ்யா கௌடா.அடுத்ததாக Radha Raman தொடரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கன்னட சீரியல் நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார் காவ்யா கௌடா.
2018-க்கு பின் சீரியல்களில் நடிக்காத இவர் ஒரு சில படங்களில் மட்டும் நடித்து அசத்தியிருந்தார்.இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருவார்.
இவர் சோமசேகர் என்பவரை 2021 மே மாதம் மணந்து கொள்ளவிருந்தார்.ஆனால் கொரோனா காரணமாக இவர்களது திருமணம் தள்ளிப்போனது.தற்போது இவருக்கு டிசம்பர் 1ஆம் தேதி திருமணம் நடைபெறவுள்ளது என்றும் அதற்கான வேலைகளை தொடங்கியுள்ளதாகவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் காவ்யா