கன்னடத்தில் ஒளிபரப்பான Avanu Matte Shravani என்ற சூப்பர்ஹிட் சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தவர் சைத்ரா ரெட்டி.இவருக்கு இந்த தொடர் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.இதனை தொடர்ந்து கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் இறுதியில் இணைந்து தமிழில் தனது என்ட்ரியை கொடுத்தார் சைத்ரா ரெட்டி.

இதனை அடுத்து ஜீ தமிழின் பெரிய ஹிட் தொடரான யாரடி நீ மோஹினி தொடரில் நடித்து அசத்தினார்.இந்த தொடரின் முக்கிய வில்லியான ஸ்வேதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார் சைத்ரா ரெட்டி.1000 எபிசோடுகளை கடந்த வெற்றிகரமான இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.

இவற்றை தவிர சில படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார் சைத்ரா ரெட்டி.இதனை தொடர்ந்து இவர் சன் டிவியில் சமீபத்தில் ஒளிபரப்பை தொடங்கிய கயல் தொடரில் ஹீரோயினாக நடித்துள்ளார்.இந்த தொடரில் ராஜா ராணி தொடரில் நடித்த சஞ்சீவ் ஹீரோவாக நடித்துள்ளார்.

இந்த தொடர் தற்போது ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் நடித்து வருகையில் சிறிய விபத்து ஏற்பட்டுள்ளதாக நாயகி சைத்ரா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.இவர் விரைவில் பூரண குணமடையரசிகர்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

serial actress chaitra reddy injured during kayal shooting sanjeev

 

serial actress chaitra reddy injured during kayal shooting sanjeev