மாடலிங் மூலம் மீடியாதுறைக்குள் அறிமுகமாகி பிரபலமான சீரியல் நடிகையாக சின்னத்திரையில் அசத்தி வருபவர் ஸ்வேதா ஸ்ரிம்டன்.மாடலிங்கில் பெரிதும் ஆர்வமுடைய இவர் விளம்பரப்படங்கள் மற்றும் ஆல்பம் பாடல்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க தொடங்கினார்.

இவற்றில் கிடைத்த வரவேற்பை அடுத்து சில சீரியல்களிலும்,படங்களிலும் சின்ன சின்ன முக்கிய வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார் ஸ்வேதா ஸ்ரிம்டன்.அடுத்ததாக ஜீ தமிழின் சித்திரம் பேசுதடி தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறினார் ஸ்வேதா ஸ்ரிம்டன்.

இந்த தொடரில் முக்கிய வில்லியாக நடித்து வரும் இவரது நடிப்பை ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர் .இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுடன் பகிர்ந்து வருவார்.இவரது நடன வீடியோக்கள் இன்ஸ்டாகிராமில் ரசிகர்கள் மத்தியில் செம ஹிட் அடிக்க தொடங்கின.

தற்போது இவர் நடிக்கும் புதிய சீரியல் குறித்த தகவல் கிடைத்துள்ளது.ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் நினைத்தாலே இனிக்கும் தொடரில் தமன்னா என்ற முக்கிய வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வந்த நேஹா விலக அவருக்கு பதிலாக ஸ்வேதா ஸ்ரிம்டன் இணைந்துள்ளார்.இதுகுறித்த சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.புதிய தொடரில் இணைந்துள்ள ஸ்வேதா தனது நடிப்பால் பல ரசிகர்களை மேலும் பெற வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்

suveta shrimpton replaces neha jha in ninaithale inikkum zee tamil serial

 

suveta shrimpton replaces neha jha in ninaithale inikkum zee tamil serial