தமிழ் சினிமாவின் பிரபல இளம் நடிகைகளில் ஒருவரான யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ள,  விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த பிரபலமடைந்தார் .

இதனையடுத்து தமிழில் நடிகர் மகத் கதாநாயகனாக நடித்துள்ள இவன் உத்தமன் , பிக்பாஸ் ஆரவ் உடன் இணைந்து ராஜ பீமா மற்றும் இயக்குனர்  S.J.சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள கடமையை செய் உள்ளிட்ட திரைப்படங்களில் கதாநாயகியாக பல திரைப்படங்களில் நடித்து வந்தார் யாஷிகா.

முன்னதாக நண்பர்களோடு இணைந்து அதிவேகமாக  பயணம் செய்த யாஷிகா ஆனந்தின் கார் பயங்கர விபத்துக்குள்ளானது. இதில் யாஷிகாவின் நெருங்கிய தோழி வள்ளி செட்டி பாவணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காரை ஓட்டிச்சென்ற யாஷிகா ஆனந்துக்கு பலத்த காயங்களும் பல்வேறு எலும்பு முறிவுகளும் ஏற்பட ,மனையில் அனுமதிக்கப்பட்ட யாஷிகா ஆனந்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பல்வேறு எலும்பு முறிவுக்கான அறுவை சிகிச்சைகள் நடைபெற்று நீண்ட நாட்களாக தீவிர மருத்துவ கண்காணிப்பில் இருந்தார். இந்நிலையில் முதல்முறையாக சில மாதங்களுக்குப் பிறகு நடிகை யாஷிகா ஆனந்த் வீட்டைவிட்டு வெளியில் வந்துள்ளார். பிரபல தனியார் முடி மாற்று சிகிச்சை மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட யாஷிகா ஆனந்த், ரிப்பன் வெட்டி தனியார் முடிமாற்று சிகிச்சை மையத்தை திறந்து வைத்தார். 

இடுப்பு மற்றும் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகள் முழுவதுமாக குணமாகாத நிலையில் கைத்தடியுடன் யாஷிகா ஆனந்த் வந்திருந்தார். விரைவில் பூரண குணமடைந்து திரைத்துறையில் மீண்டும் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.