தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர கதாநாயகிகளில் ஒருவராகவும் சிறந்த நடிகையாகவும் தொடர்ந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகை சமந்தா நடிப்பில் கடைசியாக சில வாரங்களுக்கு முன் PAN INDIA படமாக வந்த யசோதா திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து நல்ல வரவேற்பை பெற்றது. 

இதனிடையே தற்போது ஹாலிவுட் களமிறங்கும் நடிகை சமந்தா அரேஞ்ச்மெண்ட்ஸ் ஆஃப் லவ் எனும் ஆங்கில படத்தில் இயக்குனர் ஃபிலிப் ஜான் இயக்கத்தில் நடித்துள்ளார். முன்னதாக நடிகர் விஜய் தேவரகொண்டா உடன் இணைந்துள்ள சமந்தா ரொமான்டிக் காமெடி என்டர்டெய்னர் படமாக தயாராகும் குஷி திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

தொடர்ந்து சமந்தா நடிப்பில் அடுத்தடுத்து வெளிவரும் திரைப்படங்கள் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் இதிகாச கதாபாத்திரமான சகுந்தலா கதாபாத்திரத்தை மையப்படுத்தி இயக்குனர் குணசேகர் இயக்கத்தில் தெலுங்கில் தயாராகி இருக்கும் சாகுந்தலம் திரைப்படத்தில் நடிகை சமந்தா சகுந்தலா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் தேவ் மோகன், மோகன் பாபு, அதிதி பாலன், பிரகாஷ் ராஜ், கௌதமி ஆகியோர் சாகுந்தலம் திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குணா டீம் ஒர்க்ஸ் சார்பில், தயாரிப்பாளர் நீலிமா குணா தயாரித்துள்ள சாகுந்தலம் திரைப்படத்திற்கு சேகர் வி ஜோசப் ஒளிப்பதிவு செய்ய, மணிசர்மா இசையமைத்துள்ளார். சாகுந்தலம் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு அவர்களின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் வெளியிடும் சாகுந்தலம் திரைப்படம் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சமந்தாவின் சாகுந்தலம் திரைப்படத்தின் பிரம்மாண்டமான ட்ரெய்லர் தற்போது வெளியானது. அந்த ட்ரெய்லர் இதோ…