தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியாகவிருக்கும் படம் ‘வாரிச’ தமன் இசையில் பாடல்கள் வரவேற்பை பெற்றது. ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயசுதா, யோகிபாபு, ஷ்யாம் உள்ளிட்டோர் நடிப்பில் குடும்பங்களில் உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியிருக்கு வாரிசு படத்தின் டிரலைர் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழில் ஜனவரி 11 ம் தேதி பொங்கல் பண்டிகையொட்டி வெளியாகவிருகின்றது. இதையடுத்து வாரிசு படத்திற்கான முன்பதிவு தொடர்ந்து நடைபெற்று வருகிறது,

வாரிசு படம் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியிட படக்குழு படம் ஆரம்பித்ததில் இருந்து திட்டம் வைத்திருந்தது. அதன்படி வாரிசு திரைப்படம் தெலுங்கில் ‘வாரிசுடு’ என்ற பெயரில் வெளியிட படக்குழு முடிவு செய்தது. அதன்படி வாரிசுடு படத்தின் பாடல்களும் டிரைலரும் தெலுங்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக வாரிசுடு படத்தின் டிரைலர் யு டியுபில் 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.   

தமிழில் வெளியாகும் ஜனவரி 11 அன்றே தெலுங்கிலும் வெளியிட்டால் தான் தெலுங்கிலும் எதிர்பார்த்த வரவேற்ப்பு கிடைக்கும் அதுவே படத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என திட்டமிட்டு ஒரே நாளில் இரு மொழிகளிலும் வெளியிட பல நாட்களாக முயற்சி செய்தது. தெலுங்கில் நேரடியாக உருவான படங்களுக்கு மட்டும் தான் முன்னுரிமை அளித்து அதிக திரையரங்குகள் தர வேண்டும் என்று பல மாதங்களாக வாரிசுடு படத்திற்கு சர்ச்சைகள் எழுந்தது.  இந்நிலையில் தமிழில் வாரிசு ஜனவரி 11 வெளியாகும் என்றும் வாரிசுடு  'சங்கராந்தி' வெளியீடு என்றே விளம்பரப்படுத்தி வந்தனர்.

இந்நிலையில் ஐதராபாத் நடைபெற்று வரும் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வாரிசு படத்தின் தயாரிப்பாளர்  தில் ராஜு வாரிசுடு படத்தின் வெளியீடு குறித்த கேள்விக்கு விளக்கமளித்தார். மேலும்  'வாரிசுடு' படம் எந்த ஒரு படத்திற்கும் போட்டியல்ல. சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுடன் இந்தப் படம் போட்டியில்லை. தெலுங்கு திரையுலகத்தினரின் ஆலோசனைப்படி படத்தை ஜனவரி 14ம் தேதி வெளியிடுகிறோம் என்று கூறினார்.இதனையடுத்து  வாரிசுடு படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வேங்கடேஷவரா கிரியேஷன்  வாரிசுடு படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்தது. 

#Vaarasudu will arrive in theaters on January14th

Celebrate Sankranthi in theaters with your family#Thalapathy @actorvijay sir @directorvamshi @MusicThaman @karthikpalanidp @Cinemainmygenes @ramjowrites @rgvhari @ahishor @scolourpencils @vaishnavi141081 @Yugandhart_ @PVPCinema pic.twitter.com/wIfOQ6tOLe

— Sri Venkateswara Creations (@SVC_official) January 9, 2023

 

அதன்படி தெலுங்கில் வரும் ஜனவரி 12 ம் தேதி பாலகிருஷ்ணாவின் 'வீர சிம்ஹா ரெட்டி' படமும், ஜனவரி 13 ம் தேதி சிரஞ்சீவியின் 'வால்டர் வீரய்யா' படமும் வெளியாக உள்ளது.அதன்படி விஜயின் தெலுங்கு டப் ‘வரிசுடு’ ஜனவரி 14 ம் தேதி வெளிவரவிருக்கின்றன. தமிழ் வாரிசு படம் சரியான  வரவேற்பு ஒருவேளை கிடைக்கவில்லை என்றால், தெலுங்கில் வாரிசுடுவில் பாதிப்பை ஏற்படுத்தும் என சினிமா வட்டாரங்கள் பேசி வருகின்றனர்.

இரண்டு மொழியிலும் விஜயின் வாரிசு படத்திற்கான வரவேற்பு கிடைத்து வருவதே உண்மை மேலும் அதற்கான முன்பதிவும் நடைபெற்று வருகிறது. மற்றும் தமிழில் வாரிசு படம் வெளியாகும் அதே நாளில்  அஜித் நடிப்பில் வெளியாகும் படம் ‘துணிவு’ இப்படத்தின் தெலுங்கு டப் ‘தெகிம்பு’,  துணிவு வெளியாகும் அதே நாளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.