நீண்ட இடைவெளிக்கு பிறகு தளபதி விஜயின் வாரிசு திரைப்படமும் அஜித் குமாரின் துணிவு திரைப்படமும் பொங்கல் வெளியீடாக ஒரே தினத்தில் வருகிற ஜனவரி 11-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன. முதல்முறையாக தளபதி விஜய் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கானா இரு மொழிகளில் தயாராகி இருக்கும் வாரிசு (வாரிசுடு) திரைப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்கியுள்ளார்.

முன்னணி தலைமை இயக்குனர் தில் ராஜூ தயாரிப்பில் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், தமன் இசையமைத்துள்ள வாரிசு திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் வெளியிடுகிறது. இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் பேசிய நடிகர் சரத்குமார் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில், வாரிசு திரைப்படத்தின் டிரைலர் வெளியான சமயத்தில் இருந்து சூரியவம்சம் திரைப்படத்தோடு ஒப்பிட்டு அதில் எப்படி இளைய மகன் குடும்பத்திலிருந்து விலகி இருப்பது போல இதிலும் இருக்கிறார்கள் என வாரிசு திரைப்படத்தின் மீது எழும் TROLLகள் குறித்து கேட்டபோது,

“பார்த்தேன்.. பார்த்தேன்.. இங்க பாருங்கள் ஏழு ஸ்வரங்கள் அதற்குள் தான் டியூன் போட முடியும். அதுபோல படங்களில் சில படங்களின் பாதிப்புகள் வருவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. இது வந்து அந்தப் படத்தில் வந்தது போலவே இருக்கிறது என சொல்ல வாய்ப்பு இருக்கிறது. அதில் நான் நடித்திருப்பதால் அந்தப் படத்தோட பாதிப்பு இருக்குமோ என நினைக்கலாம். எனவே இந்த பாதிப்புகள் இருக்கத்தான் செய்யும். நிறைய படங்கள் பார்க்கிறோம். அந்த படங்கள் இந்த படம் மாதிரியே இருக்கிறதே என நினைப்போம். ஒருவருடைய மனதில் உருவாகும் அந்த கரு, ஒருவர் மனதிலும் வரலாம் இல்லையா... நான் இன்னொரு பேட்டியில் கூட சொல்லி இருந்தேன். நான் சூரியன் திரைப்படம் என்றோ நடித்திருந்தேன். ஆனால் அண்மையில் ஒரு மூன்று நான்கு வருடங்களுக்கு முன்பு வந்த ஒரு படம். ஆங்கில படம் இது சூரியனுக்கு முன்னாடியா பின்னாடியா என யோசனை செய்கிறேன், இதை பார்த்து பவித்ரன் செய்து விட்டாரோ? என்று பார்த்தேன். காட்சிக்கு காட்சி அப்படித்தான் இருந்தது. கிட்டத்தட்ட அப்படித்தான் இருந்தது. அப்படி என்றால் இந்த ஆங்கில படம் சூரியன் படத்தை பார்த்து எடுத்தார்களா? அவருக்கும் அப்படி ஒரு சூழ்நிலை அமைந்திருக்கும் அப்படிதான் வந்திருக்குமே ஒழிய ஒரு கதை என்றால் உறவு தந்தை, மகன், சகோதரன், சகோதரி அப்படித்தானே ஒரு கதை அமைப்பு வரும் பின்னர் ஒரு வில்லன் இதைத் தவிர வேறு என்ன படம் எடுத்து விட முடியும். அதற்குள் சில விஷயங்கள் பார்த்த மாதிரி தான் இருக்கும் அதை அவர்கள் எப்படி TREAT செய்திருக்கிறார்கள் என்று தான் பார்க்க வேண்டும். மேலும் படம் பார்த்த பிறகு தான் முடிவு செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார் நடிகர் சரத்குமாரின் அந்த முழு பேட்டி இதோ…