தமிழ் சினிமாவின் பிரபல பாடகரான ஆண்டனி தாசன், கருணாஸின் திண்டுக்கல் சாரதி படத்தில் இடம்பெற்ற திண்டுக்கல்லு திண்டுக்கல்லு பாடலின் மூலம் பாடகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் வெளிவந்த சூது கவ்வும் படத்தில் இடம் பெற்ற காசு பணம் துட்டு மணி மணி பாடலின் மூலம் மிகப் பிரபலம் அடைந்தார்.

குறிப்பாக வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஓபனிங் பாடல், ஜிகர்தண்டா படத்தின் பாண்டிய நாட்டு கொடி, தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சொடக்கு மேல சொடக்கு, பேட்டை படத்தில் ஆஹா கல்யாணம், மேயாத மான் படத்தின் தங்கச்சி பாடல் என பல சூப்பர் ஹிட் பாடல்களை ஆன்டணி தாசன் பாடியுள்ளார்.

மேலும் இசையமைப்பாளராகவும் இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சத்யராஜ் மற்றும் சசிகுமார் இணைந்து நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படத்தில் ஆன்டணி தாசன் இசையமைத்திருந்தார். இன்னிலையில் பாடகர் ஆண்டனி தாசனின் தந்தை நேற்று (ஜனவரி 5) காலமானார். பிரபல பாடகர் ஆண்டனி தாசனின் தந்தை மறைவுக்கு கலாட்டா குழுமம் ஆழ்ந்த இரங்கலை தெரிவிக்கிறது.

இதுகுறித்து பாடகர் ஆண்டனி தாசன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது தந்தை புகைப்படத்தை பதிவிட்டு, “என் அப்பா இறைவனடி சேர்ந்தார்” என தெரிவித்துள்ளார். எனவே ஆண்டனி தாசனின் தந்தை மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்த பிரபலங்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.