‘உணவுதான் முக்கியம், அணு ஆயுதங்கள் அல்ல’ என வடகொரிய அதிபர் சமீபத்தில் கூறிய நிலையில் அந்நாட்டு மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது.

kim jong un

அணு ஆயுதங்களை தாக்கிச்செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்துவரும் நாடு வடகொரியா. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலேயே இந்த ஏவுகணை சோதனைகளில் வடகொரியா ஈடுபட்டு வருகிறது. மேலும் தங்கள் ஆயுத பலத்தை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில்  புத்தாண்டு தினத்தன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இன்றைய பொருளாதார சூழலில் பொதுமக்களுக்கு உணவு தான் முக்கியமே தவிர அணு ஆயுதங்கள் அல்ல என்று தெரிவித்தார் . இதனால் இந்த ஆண்டு முதல் வடகொரியா ஏவுகணை பரிசோதனையை படிப்படியாக குறைத்துக்கொள்ளும் என நம்பிக்கை உருவானது.

மேலும்  வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனையில் இறங்கியுள்ளது.  தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணையை வடகொரியா இன்று சோதனை செய்துள்ளதாக தென்கொரியா மற்றும் ஜப்பான் தெரிவித்துள்ளது. 

மேலும் வடகொரியாவின் கிழக்கு கடற்கரை பகுதியில் இருந்து இந்த ஏவுகணை பரிசோதனை நடைபெற்றதாக ஜப்பான் கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை 500 கிலோமீட்டர் தூரம் பயணித்து ஜப்பான் சிறப்பு பொருளாதார மண்டல கடற்பரப்பில் விழுந்ததாக ஜப்பான் பாதுகாப்புத்துறை மந்திரி தெரிவித்துள்ளார். வடகொரிய பொது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் வகையில் ஐந்தாண்டு திட்டம் உருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படும் என கிம் ஜோன்ங் உன் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.