பா ரஞ்சித்தின் ‘பொம்மை நாயகி’ படத்தின் புது அப்டேட் – ரசிகர்களை கவர்ந்து வரும் Special Glimpse..

யோகி பாபுவின் பொம்மை நாயகி திரைப்படத்தின் புதிய காட்சியை வெளியிட்ட படக்குழு - Yogi babu Bommai nayagi movie new glimpse released by team | Galatta

இந்த ஆண்டில் திரையுலகினரின் எதிர்பார்ப்பின் பிரபல இயக்குனர் பா.ரஞ்சத்தின் நீலம் தயாரிப்பு மற்றும் யாழி பிலிம்ஸ் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் ஷான் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள படம் ‘பொம்மை நாயகி’. இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் அதிசய ராஜ் ஒளிப்பதிவு செய்ய சுந்தரமூர்த்தி இசை அமைத்துள்ளார் . பொம்மை நாயகி படத்தில் யோகி பாபுவுடன் இணைந்து சுபத்ரா, ஹரி, ஜி.என்.குமார், அருள்தாஸ், ஜெயச்சந்திரன், லிசி ஆண்டனி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் டிரைலர் முன்னதாக வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்றது. எளிமையான தந்தை மகளை தொலைத்து அலைந்து  தேடும் நம்பராக யோகி பாபு இதில் நடித்துள்ளார். மகளுக்கு நேர்ந்த அநியாயத்தை போராடி நீதி கேட்கும் கதைக்களத்தில் உருவாகியுள்ள பொம்மை நாயகி திரைப்படம் வரும் பிப்ரவரி 3 திரைக்கு வரவிருக்கின்றனர். இதனையடுத்து இப்படத்தின் விளம்பர பணி பல இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழு பங்கேற்று படம் குறித்து பேசியிருந்தனர். இவ்விழாவில் யோகி பாபு, தயாரிப்பாளர் பா ரஞ்சித் மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் சிறப்பு விருந்தினராக இயக்குனர் மாரி செல்வராஜ் பங்கேற்று இருந்தார்.

இப்படத்தின் சிறப்பு காட்சியில் இயக்குனர் பாக்கியராஜ், இயக்குனர் சசி, இயக்குனர் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கேற்றனர். படம்பார்த்த பிரபலங்கள் படம் குறித்து நல்ல விமர்சனத்தை பகிர்ந்துள்ளனர். இந்நிலையில் இப்படத்தின் காட்சி ஒன்றை தற்போது படக்குழு வெளியிட்டு உள்ளது. அப்பா மகளுக்கு இடையே நடைபெறும் உரையாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்து தற்போது வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் படத்திற்கான தணிக்கை குழு ‘யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது.

Our emotional and profound #BommaiNayagi is rated U/A ♥️

Only 3 more days to go! #BommaiNayagiFromFeb3

A film by @shan_shanrise
A @SundaramurthyKS Musical@beemji @iYogiBabu @YaazhiFilms_ @Manojjahson @ZeeTamil @athisayam_rajj @EditorSelva @KaviKabilan2 @TherukuralArivu pic.twitter.com/Z8lbTx1xeS

— Neelam Productions (@officialneelam) January 31, 2023

யோகி பாபு தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர்.பல ஆண்டுகளாக மக்களை தன் நகைச்சுவை மூலம் குதூகலப்படுத்தியவர். மேலும் நகைச்சுவை மட்டுமல்லாமல் தனித்துவமான கதைகளை தேர்ந்தெடுத்து முன்னணி நடிகராகவும் நடித்து வருகிறார். குறிப்பாக 2020 ல் வெளியான  'மண்டேலா' திரைப்படம் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து பாராட்டுகளை பெற்றது.

பொம்மை நாயகியில்  எளிய குடும்பத்து தகப்பனாக நடித்துள்ளார் யோகி பாபு. உணர்வுபூர்வமான தன் நடிப்பினை பொம்மை நாயகி திரைப்படத்தில் வெளிகாட்டியுள்ளதால் இந்த படம் நிச்சயம் யோகி பாபு திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.  மேலும் ரசிகர்கள் தற்போது யோகி பாபு மற்றும் படக்குழுவினருக்கு பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் - மீண்டும் ட்ரெண்ட் செய்யப்படும் புகைப்படம் இதோ..
சினிமா

அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் - மீண்டும் ட்ரெண்ட் செய்யப்படும் புகைப்படம் இதோ..

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..
சினிமா

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!
சினிமா

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!