14 ஆண்டுகளுக்கு பின் தளபதி விஜய் படத்தில் இணைந்த திரிஷா.. ரசிகர்கள் கொண்டாட்டம் - ‘தளபதி 67’ படக்குழு வெளியிட்ட Special Video..

தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்த நடிகை திரிஷா - Thrisha joins vijay film Thalapathy 67 official announcement | Galatta

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது தளபதி நடித்து வரும் ‘தளபதி 67’ திரைப்படம் இந்திய அளவு மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. வாரிசு வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்து களமிறங்கும் படம் என்பதாலும் ‘விக்ரம்’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இயக்குனர் லோகேஷ் இயக்கவிருக்கும் படம் என்பதாலும் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய அளவு உருவாகியுள்ளது. செவன் ஸ்க்ரீன் தயாரிப்பில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். தற்போது தளபதி 67 திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் இப்படத்தின் தளபதி விஜயுடன் நடிக்கபோகும் நடிகர்கள் பட்டியல் முன்னதாக அரசல்புரசலாக வெளியானது. இதனையடுத்து ஜனவரி 31 நேற்று முதல் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் பட்டியலை ஒவ்வொன்றாக படக்குழு அறிவித்து வருகிறது. அதன்படி  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த்,  மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக பட்டியலை வெளியிட்டனர். மேலும் இதை தொடர்ந்து மேலும் பல நடிகர்கள் அறிவிக்கப்படவுள்ளனர் என்று தகவல் வெளியாகியிருந்தது.

இந்நிலையில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான திரிஷா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளார் என்ற அறிவிப்பை பிரத்யேக வீடியோவுடன் வெளியிட்டது படக்குழு. 14 ஆண்டுகளுக்கு பிறகு திரையில் தோன்றவிருக்கும் விஜய் – திரிஷா ஜோடியை ரசிகர்கள் உற்சாகத்தோடு வரவேற்று அந்த சிறப்பு வீடியோவை ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.  

Vantom.. Neenga keta update idho 😉
After 14 years, Get ready to meet the sensational on-screen pair once again ❤️#Thalapathy @actorvijay sir - @trishtrashers mam#Thalapathy67Cast #Thalapathy67 @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/7kvd7570ti

— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023

மேலும் அதனை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிவிப்பு போஸ்டரில் தளபதி 67 படம் குறித்து திர்ஷா குறிப்பிட்ட வார்த்தைகள் “இந்த படத்தில் எனக்கு பிடித்த சிலருடனும், அபார திறமை கோடா குழுவுடனும் நான் இருப்பதால் பெருமை கொள்கிறேன். சிறந்த நாட்களை எதிர்நோக்கி உள்ளேன்.”

Extremely happy to welcome @trishtrashers mam onboard for #Thalapathy67 ❤️#Thalapathy67Cast #Thalapathy @actorvijay sir @Dir_Lokesh @Jagadishbliss pic.twitter.com/r0zAdCwZ9r

— Seven Screen Studio (@7screenstudio) February 1, 2023

தமிழ் சினிமாவில் சில ஜோடிகள் மட்டுமே மக்கள் மனதை அதிகம் கவர்ந்து காலம் கடந்தும் அதிகம் பேசப்படும். அந்த வரிசையில் தளபதி விஜய் த்ரிஷா படங்களுக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 2005 ல் வெளிவந்த ‘கில்லி’ திரைப்படம் மூலம் அறிமுகமான இந்த ஜோடி மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது. விஜயின் திரைபயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக கில்லி திரைப்படம் அமைந்தது. அதுவரை மென்மையான கதாபாத்திரத்தில் பரிச்சையமான விஜய். அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக களம் இறங்கிய கில்லி திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. அனைத்து தரப்பு ரசிகர்களின் மனங்களை வென்று இன்று வரை ஜனரஞ்சகமா வரவேற்பை பெற்று வருகிறது. இந்த திரைப்படம் விஜய்க்கு மட்டுமல்லாமல் நடிகை திரிஷாவுக்கும் திருப்பு முனையாக அமைந்தது. விஜய் - திரிஷா ஜோடி ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இப்படத்தை தொடர்ந்து மீண்டும் 2005 ல் வெளிவந்த ‘திருப்பாச்சி’ படத்தில் மூலம் இந்த ஜோடி இணைந்தது.

விஜய் திரைப்பயணத்தில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர் ஹிட். லக்கி ஜோடியாக திரையுலகில் பேசப்பட்ட விஜய் திரிஷா ஜோடி மீதான கவனம் தமிழ் சினிமாவில் அதிகம் பேசப்பட்டது. இந்த படத்திலும் இருவரது நடிப்பிற்கும் ரசிகர்கள் பாரட்டுகளை தெரிவித்தனர். அதன் பின் 2006 ல் மூன்றாவது முறையாக விஜய் படத்தில் திரிஷா இணைந்தார். குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி பழிவாங்கும் கதைக்களத்தில் வெளியான ‘ஆதி’ திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் விஜய் – திரிஷா ஜோடி க்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை தொடர்ந்து 2008 ல் ‘குருவி’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்த இந்த ஜோடிக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. படம் முழுக்க விஜயுடன் பயணிக்கும் திரிஷா வரும் காட்சிகள் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தொடர்ந்து நான்கு முறை இணைந்த இந்த கூட்டணி 14 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் தளபதி 67 திரைப்படத்தை பெரிதும் எதிர்பார்த்து உள்ளனர்.

தமிழ் சினிமாவில் பல தசாப்தன்களாக முன்னணி நடிகையான திரிஷா சமீபத்தில் சில ஆண்டுகள் இடைவெளி எடுத்தபின் இயக்குனர்  மணிரத்தினம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன் பாகம் – 1 ‘ படத்தில் நடித்து பெரும் பாராட்டை பெற்றார். அதனை தொடர்ந்து த்ரிஷா நடிப்பில் ‘ராங்கி’ திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ‘பொன்னியின் செல்வன் பாகம் – 2’ வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

தீ பறக்கும் சேஸிங்.. துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு .. வைரலாகும் Action Glimpse இதோ..
சினிமா

தீ பறக்கும் சேஸிங்.. துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு .. வைரலாகும் Action Glimpse இதோ..

 ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை  - ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை - ரசிகர்கள் கொண்டாட்டம்

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..
சினிமா

மாஸ்டர் படத்திற்கு பிறகு திரையில் மாளவிகா மோகனன்.. - புதுப்பட டீசர் இதோ..