‘RJ Balaji Haters Meet’ – இது புதுசா இருக்கே! ரசிகர்களை கவரும் வித்யாசமான சந்திப்பு - வைரலாகும் வீடியோ இதோ..

தனது haterகளை படத்திற்காக சந்தித்த நடிகர் ஆர் ஜே பாலாஜி  - First time RJ Balaji meet his Haters for his run baby run movie promotions | Galatta

பொதுவாகவே நட்சத்திரங்கள் தங்களுடைய ரசிகர்களை அவ்வப்போது சந்திப்பது வழக்கம். குறிப்பாக அவரது படங்கள் வெளியாகும் போது ரசிகர்களுடனான சந்திப்பு ஏற்பாடு செய்வது சமீபத்தில் நிகழ்ந்து வருகிறது. தமிழில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த் அவரது ரசிகர்களை மண்டபத்தில் சந்திப்பதும், தளபதி விஜய் தனது படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ராசிகளை சந்திப்பதும் மற்ற நட்சத்திரங்கள் பட வெளியீட்டின் போது சந்திப்பதும் என சமீபத்தில் நிகழ்ந்து வருகிறது. இதில் சற்று வேறுபட்டு சில ரசிகர்களை தேர்ந்தெடுத்து அதில் சிலரை நேரில் சந்திக்கும் புதிய சந்திப்பை தமிழில் கடந்த ஆண்டு உலகநாயகன் கமல் ஹாசன் அறிமுகப் படுத்தினார். அவர் நடித்து கடந்த ஆண்டு வெளியாகிய ‘விக்ரம்’ படத்திற்கான விளம்பரத்திற்காக தனது ரசிகர்களை நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு அதிகம் பேசப்பட்டது. இதை தொடர்ந்து பலர் இதே யுக்தியை தற்போது பல நட்சத்திரங்கள் கையிலெடுத்து வரகின்றனர்.இந்த சந்திப்பு முறை பல ஆண்டுகளாக வெளிநாடுகளிலும் பாலிவுட் துறையிலும் வழக்கம்.

நடிகர் ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வரும் பிப்ரவரி 3 ம் தேதி திரைக்கு வெளிவரவுள்ள ‘ரன் பேபி ரன்’ திரைப்படத்தின் வெளியீட்டையடுத்து பல விதமான புரோமோஷன் வேலைகளில் ஆர் ஜே பாலாஜி நேரடியாக இறங்கினார். அதன்படி ஆர் ஜே பாலாஜி தனது ரசிகர்களுக்கு பதிலாக தனது haters களை நேரில் சந்தித்தார். ஆர் ஜே பாலாஜியிடம் பிடிக்காத விஷயம் என்ற கேள்விக்கு ரசிகர்கள் தெரிவித்த பதிலை மறைமுகமாக நின்று வேடிக்கை பார்த்து பின் அவர் முன்பு surprise கொடுக்கும் வீடியோ  தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. வழக்கமான ரசிகர் சந்திப்பை தாண்டி haters சந்திப்பு சற்று வித்யாசமாக இருந்ததால் அந்த வீடியோ ரசிகர்களை அதிகம் கவர்ந்தது.

#RunBabyRun

HATER’s MEET !!! 🖤🙈

(P.S - people are really kind and sweet in real life 😀❤️) pic.twitter.com/7zGLOkjEdR

— RJ Balaji (@RJ_Balaji) January 31, 2023

இதற்கு முன்பு ஆர் ஜே பாலாஜி ரன் பேபி ரன் திரைப்படத்திற்காக கிளி ஜோசியம் பார்த்து விளம்பர படுத்தியும், மேலும் அதனை தொடர்ந்து பட விளம்பரத்திற்காக  தன் மகனுடன் நேர்காணல் இறங்கினார். மேலும் இந்தியா நியுசிலாந்து கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்று படத்திற்கு விளம்பர படுத்தினார். அதுமட்டுமல்லாமல் விஜய் தொலைகாட்சியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் துவக்க விழாவிலும் பங்கேற்றார். இதுபோன்ற விளம்பரங்களில் ஆர் ஜே பாலாஜி நேரடியாக இறங்கியுள்ளதால ரசிகர்கள் அவரை அமோகமாக வரவேற்று அந்த வீடியோக்களை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.  

ரன் பேபி ரன் திரைப்படத்தில் ஆர் ஜே பாலாஜி யுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..
சினிமா

உலககோப்பை விளையாடிய கிரிக்கெட் வீரரை மணக்கும் நடிகர் தலைவாசல் விஜயின் மகள் – ரசிகர்களிடம் குவியும் வாழ்த்து..

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!
சினிமா

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்