‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து ‘தளபதி 67’ பட பாடல்களை கைப்பற்றிய பிரபல நிறுவனம் - அதிகாரப் பூர்வ அப்டேட் இதோ..

தளபதி 67 படத்தின் பாடல் உரிமத்தை கைப்பற்றிய சோனி மியூசிக்  - Thalapathy 67 associated with Sony music south for song rights | Galatta

இந்திய சினிமாவே மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பை வைத்துள்ள திரைப்படம் ‘தளபதி 67’ . இந்த திரைப்படத்திற்கான பேச்சு கடந்த சில ஆண்டுகளிலிருந்து இன்று வரை மிகப்பெரிய பேசுபொருளாக இந்த படம் இருந்து வருகிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தளபதி 67’ திரைப்படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனம் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் இசையமைப்பாளர் அனிரூத் இசையமைக்க ‘பீஸ்ட்’ திரைப்பட ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மற்றும்  ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அப்டேட் கேட்டு ரசிகர்கள் கடந்த சில ஆண்டுகளாக படக்குழுவை நாடிய நிலையில் தற்போது தளபதி 67 திரைப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு அறிவித்த வண்ணம் உள்ளது. அதன் படி அப்டேட்டின் முதல் இன்னிங்க்ஸ் நேற்று ஜனவரி 31 அன்று தொடங்கியது. அதில் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்த அப்டேட்டை வெளியிட்டது படக்குழு. அதன் படி, பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், நடிகை பிரியா ஆனந்த், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் மற்றும் பிரபல நடன இயக்குனர் சாண்டி மாஸ்டர் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கவுள்ளனர்.

இந்நிலையில் தளபதி 67 படத்திற்கான இரண்டாவது இன்னிங்க்ஸ் அப்டேட்டைதற்போது  வெளியிட்டு வருகிறது படக்குழு. அதன்படி முதல் அப்டேட்டாக தளபதி 67 படத்தில் விஜயுடன் இணைந்து நடிகை திரிஷா நடிக்கவுள்ளதாக அறிவிப்பை வெளியிட்டது. ஐந்தாவது முறையாக இந்த கூட்டணி அமையவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது காஷ்மீரில் முகாமிட்டுள்ள தளபதி 67 படக்குழு அடுத்த கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இறங்கியுள்ளது.  

இந்நிலையில் தளபதி 67 படத்திற்காக அனிரூத் இசையமைத்துள்ள பாடல்கள் மற்றும் இசை உரிமையை பிரபல சோனி மியூசிக் சவுத் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வமாக படக்குழு அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவான ‘மாஸ்டர்திரைப்படத்தின் பாடல் மற்றும் இசை உரிமையை சோனி நிறுவனம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து சோனி நிறுவனம் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை பகிர்ந்துள்ளது.

#Thalapathy67OnSonyMusic 💣🥁

THE BIGGEST CELEBRATION BEGINS NOW! 🔥

Ecstatic to be associated with the prestigious #Thalapathy67 ! ❤️‍🔥

The @anirudhofficial musical explosion 💥 🔜

Once again with #Thalapathy @actorvijay Sir @7screenstudio @Dir_Lokesh @Jagadishbliss 💥 pic.twitter.com/u8cgH9o4rt

— Sony Music South (@SonyMusicSouth) February 1, 2023

தொடர்ந்து இரண்டு நாட்களாக இணையத்தை ஆக்கிரமிக்கும் தளபதி 67 திரைப்படம் தொடர்ந்து அப்டேட்டுகளை குவித்து வருவதால் ரசிகர்கள் உற்சாகத்தில் படக்குழுவினரின் அப்டேட்டை பகிர்ந்து வருகின்றனர்.

அட்லீ – பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. அசத்தலான வீடியோவுடனான அறிவிப்பு இதோ..
சினிமா

அட்லீ – பிரியா தம்பதியினருக்கு ஆண் குழந்தை.. குவிந்து வரும் வாழ்த்துக்கள்.. அசத்தலான வீடியோவுடனான அறிவிப்பு இதோ..

தீ பறக்கும் சேஸிங்.. துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு .. வைரலாகும் Action Glimpse இதோ..
சினிமா

தீ பறக்கும் சேஸிங்.. துணிவு படப்பிடிப்பு காட்சிகளை வெளியிட்ட படக்குழு .. வைரலாகும் Action Glimpse இதோ..

 ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை  - ரசிகர்கள் கொண்டாட்டம்
சினிமா

ஜப்பானில் ‘ஆர்.ஆர்.ஆர்’ சாதனை .. இந்தியாவில் இதுவே முதல் முறை - ரசிகர்கள் கொண்டாட்டம்