முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!

நடிகர் ப்ரித்விராஜுடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு,prithviraj met suriya and jyothika photo goes viral on social media | Galatta

தமிழ் சினிமாவின் நட்சத்திர நாயகர்களில் ஒருவராகவும் தென்னிந்திய திரை உலகின் ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் வலம் வரும் நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிவா இயக்கத்தில் உருவாகும் சூர்யா42 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பில் பல்வேறு மொழிகளில் 3D தொழில்நுட்பத்தில் சூர்யா42 திரைப்படம் தயாராகி வருகிறது.

முன்னதாக இயக்குனர் பாலாவுடன் இணைந்து நடித்து வந்த வணங்கான் திரைப்படத்திலிருந்து வெளியேறிய நடிகர் சூர்யா, அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் உடன் முதல் முறையாக கைக்கோர்க்கிறார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தில் சூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். கலைப்புலி.S.தாணு தயாரிக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.

இதனிடையே இயக்குனர் சுதா கோங்கரா இயக்கத்தில் அக்ஷய் குமார் கதாநாயகனாக நடிக்கும் தனது சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடித்துவரும் சூர்யா, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்து வரும் தளபதி 67 திரைப்படம் ஒருவேளை லோகேஷ் கனகராஜின் LCUல் இடம்பெரும் பட்சத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மீண்டும் வந்து மிரட்டுவார் என்றும் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் நடிகர் ப்ரித்விராஜ் தனது மனைவியோடு சூர்யா மற்றும் ஜோதிகா இருவரையும் நேரில் சந்தித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். முன்னதாக ஜோதிகாவுடன் இணைந்து மொழி படத்தில் ப்ரித்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்நிலையில் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரையும் சந்தித்த மகிழ்ச்சியான தருணத்தின் புகைப்படத்தை ட்விட்டரில் ப்ரித்விராஜ் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படம் இதோ…
 

Friends who inspire! ❤️ pic.twitter.com/bSn1FURVsO

— Prithviraj Sukumaran (@PrithviOfficial) January 26, 2023

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ
சினிமா

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ

வருகிறான் கேப்டன் மில்லர் - துப்பாக்கியுடன் தனுஷ்.. Special glimpse இதோ.
சினிமா

வருகிறான் கேப்டன் மில்லர் - துப்பாக்கியுடன் தனுஷ்.. Special glimpse இதோ.

சிலம்பரசன்TRன் பக்கா மாஸான பத்து தல… பாடல்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு இதோ!
சினிமா

சிலம்பரசன்TRன் பக்கா மாஸான பத்து தல… பாடல்கள் குறித்து வெளியான அதிரடி அறிவிப்பு இதோ!