சந்தீப் கிஷன்-விஜய் சேதுபதி-கௌதம் வாசுதேவ் மேனனின் அதிரடி ஆக்சன் படமாக வரும் மைக்கேல்... மிரட்டலான புதிய GLIMPSE இதோ!

மைக்கேல் படத்தின் ஸ்டண்ட் காட்சிகளின் மேக்கிங் வீடியோ வெளியானது,Sundeep kishan in michael movie making video out now | Galatta

அடுத்தடுத்து குறிப்பிடப்படும் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் நடிகர் சந்தீப் கிஷன். தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் பல படங்களில் நடித்துவரும் சந்திப் கிஷன் இயக்குனர் லோகேஷ் கனகராஜின் மாநகரம் திரைப்படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களிடையே மிக பிரபலமடைந்தார்.

அடுத்ததாக ராக்கி மற்றும் சாணிக் காயிதம் படங்களின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க, அதிரடியான பீரியட் படமாக தயாராகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த வரிசையில் சந்தீப் கிஷன் நடிப்பில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகி இருக்கும் திரைப்படம் மைக்கேல். 

புரியாத புதிர் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், சந்தீப் கிஷனுடன் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன், வரலக்ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கௌஷிக் மற்றும் வருண் சந்தேஷ் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் கரண் C ப்ரொடக்சன் இணைந்து தயாரிக்க, இயக்குனர் லோகேஷ் கனகராஜ் வெளியிடும் மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. கிரண் கௌசிக் ஒளிப்பதிவில், R.சத்ய நாராயணன் படத்தொகுப்பு செய்யும் மைக்கேல் படத்திற்கு சாம்.CS இசையமைத்துள்ளார். இந்நிலையில் மைக்கேல் திரைப்படத்தின் அதிரடி ஆக்சன் காட்சிகள் உருவான விதம் மேக்கிங் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது. அதிரடியான அந்த மேக்கிங் வீடியோ இதோ…
 

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!
சினிமா

தளபதி 67 பட அதிரடி அறிவிப்புகளின் முதல் இன்னிங்ஸ்... அட்டகாசமான நடிகர்களின் பட்டியல்!

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!
சினிமா

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!