குக் வித் கோமாளி சீசன் 4 பிரபல நடிகரின் Surprise entry.. – ட்ரெண்டாகும் கலகலப்பான வீடியோ இதோ..

குக் வித் கோமாளி 4 ல் பங்கேற்ற பிரபல நடிகர் -  Rj Balaji visit Cook with comali | Galatta

விஜய் தொலைக்காட்சியின் மிகப்பெரிய வெற்றி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி சீஸன் 4 பிக் பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்ததையடுத்து இன்று ஒளிப்பரப்படவுள்ளது. காமெடி குறும்புகளும் அட்டகாசமான சேட்டைகளும் கொண்ட இந்நிகழ்ச்சிக்கு மக்கள் பெரும் எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். காரணம் கடந்த சீஸன்களின் கிடைத்த அமோக வரவேற்பு. மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் விஜய் டீவியின் பார்வையாளர்களை அதிகப்படுத்தயுள்ளது. மூன்று சீசன்களை கடந்த குக் வித் கோமாளியின் நான்காவது சீஸன் ஓப்பனிங் ஷோவிற்கான படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து விட்ட நிலையில் இன்று இரவு 9.30 மணியளவில் ஒளிப்பரப்படவுள்ளது.கோமாளிகள் ஒருபுறம் சமையல் போட்டியாளர்கள் ஒருபுறம் என்று நிகழ்ச்சியை அதகளப்படுத்தவுள்ளனர்.நடுவராக வழக்கம் போல் சமையல் கலை வல்லுநர் வெங்கடேஷ் பட் மற்றும் தாமு பங்கேற்கிறார். மற்றும் ரக்ஷன் நிகழ்சியை தொகுத்து வழங்குகிறார்.

இந்த சீசன்களில் போட்டியாளராக நடிகை ஸ்ருஷ்டி டாங்கே, நடிகை ஷெரின், நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷிவாங்கி, விஜே விஷால், ஜிகர்தண்டா நடிகர் காளையன், நடிகை விசித்ரா, ஆன்ட்ரின் நௌரிகட் ஆகியோர் களம் இறங்கவுள்ளனர். இவர்களை தொடர்ந்து கோமாளிகளாக நுழையும் நபர்கள் மணிமேகலை, சுனிதா, குரேஷி, புகழ் என்று ஏற்கனவே இருந்த கோமாளியுடன் புதிதாக ஜி.பி முத்து,  சீரியல் நடிகை ரவீனா, குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் கலந்து கொள்ள விருக்கின்றனர். இந்நிகழ்ச்சியில் மேலும் சிறப்பு சேர்க்கும் விதத்தில் நடிகர் ஆர் ஜே பாலாஜி இனிகழ்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.

ஆர்.ஜே பாலாஜி நடித்து வரும் பிப்ரவரி 3 ம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் 'ரன் பேபி ரன்' ‌ ரிலீஸ் தேதியையடுத்து பல விதங்களில் புரோமோஷன்களில் ஆர் ஜே பாலாஜி ஈடுபட்டு வருகிறார். அதன் அடுத்த படியாக குக் வித் கோமாளியில் பங்கேற்கிறார் ஆர் ஜே பாலாஜி.  இதுகுறித்து புரோமை வெளியிட்ட விஜய் டிவி. ரசிகர்களால அதிகம் பகிரப்பட்டு வருகிறது. 

இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி யுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் படத்தில் ராதிகா சரத்குமார், இஷா தல்வார், ஸ்மிருதி வெங்கட், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜியன் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் சாம் சிஎஸ் இசையில் உருவாகி வரும் இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!
சினிமா

முன்னணி நட்சத்திர நடிகருடன் சூர்யா - ஜோதிகா சந்திப்பு... சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம் இதோ!

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
சினிமா

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!