விரைவில் தாயாகிறார் நடிகை பூர்ணா... சோசியல் மீடியாவில் வைரலாகும் வளைகாப்பு புகைப்படங்கள்!

நடிகை பூர்ணாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியீடு,actress poorna shared her baby shower photos | Galatta

கடந்த 2004ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த மஞ்சு போலொரு பெண் குட்டி திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தென்னிந்திய திரை உலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக திகழும் நடிகை பூர்ணா எனும் ஷம்னா காசிம், தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் மிக முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகர் பரத் நடிப்பில் வெளிவந்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான பூர்ணா தொடர்ந்து துரோகி, வித்தகன், ஜன்னல் ஓரம், தகராறு, சவரக்கத்தி, லாக்கப், அடங்க மறு, காப்பான், தலைவி, விசித்திரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 

அடுத்தடுத்து மலையாளம், தெலுங்கு, தமிழ், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் நடித்து வரும் பூர்ணா இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் பிசாசு 2 திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகை பூர்ணாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் தற்போது கர்ப்பமாக இருக்கும் நடிகை பூர்ணாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் "என் வாழ்வின் சிறந்த நிகழ்வுகள்... என் மீதும் என் குழந்தை மீதும் நீங்கள் அனைவரும் பொழியும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி.." என குறிப்பிட்டு வளைகாப்பு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…

 

 

View this post on Instagram

A post shared by Shamna Kkasim ( purnaa ) (@shamnakasim)

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

காஜல் அகர்வால்-ரெஜினா கெஸன்ட்ரா-யோகி பாபு இணைந்து கலக்கும் புதிய ஹாரர் காமெடி படம்... அசத்தலான ட்ரெய்லர் இதோ!

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!
சினிமா

அழகிய தொகுப்பாக OTTயில் வெளிவரும் ஹன்சிகாவின் திருமண நிகழ்வு... ரிலீஸ் தேதி அறிவிப்போடு வந்த புது வீடியோ இதோ!

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!
சினிமா

நடிகை இலியானா மருத்துவமனையில் அனுமதி... தற்போதைய உடல்நிலை குறித்து புகைப்படத்துடன் பதிவு!