அதிக லைக்குகள் பெற்ற கோலிவுட் நடிகர்களில் சிவகார்த்திகேயன் முதலிடம் - மீண்டும் ட்ரெண்ட் செய்யப்படும் புகைப்படம் இதோ..

அதிக லைக்குகள் கொண்ட கோலிவுட் நடிகரானார் சிவகார்த்திகேயன் - Sivakarthikeyan with most likes actor of social media | Galatta

வளர்ந்து வரும் இளம் நடிகர் என்ற‌ பட்டியலில் இருந்து ப்ளாக் பஸ்டர் தரும் நடிகர் என்று உச்சம் பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்ப காலக்கட்டத்தில் தொலைக்காட்சியில் பணியாற்றி பின் 2012  ஆண்டில் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த சிவகார்த்திகேயன். அவரது நடிப்பு மற்றும் நகைச்சுவைக்காகவே ரசிகர் கூட்டம் உருவாகியது. மேலும் உழைத்து நடிப்பு, நடனம் என்று பல திறன்களை மேம்படுத்தி ஜனரஞ்சகமான கதாநாயகனாக உருவெடுத்தார். திரைக்கு வந்து சில ஆண்டுகளிலே ப்ளாக் பஸ்டர் வசூல் அடிக்க தொடங்கினார் சிவகார்த்திகேயன். பின் தொடர்ந்து வெற்றி படங்களையே கொடுத்து தற்போது தமிழ் சினிமாவில் மிகப்பெரிய கதாநாயகன் பட்டியலில் சிவகார்த்திகேயன் இணைந்துள்ளார்.

குறிப்பாக இவரது முந்தைய படங்களான ‘டாக்டர்’, ‘டான்’ திரைப்படங்களின் வெற்றியில் திரையுலகம் சிவகார்த்திகேயனை ஆச்சரியத்தில் பார்த்தது. தற்போது சிவகார்த்திகேயன் அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பு மட்டுமல்லாமல் திரைப்படங்களை தயாரித்தும் வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் பாடலாசிரியராகவும் தமிழ் சினிமாவாக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். இவர் எழுதிய பாடலோ அல்லது நடித்த பாடலோ இணையத்தில் வைரலாகி அதிக சாதனை பெறுவது வழக்கம். குறிப்பாக விஜய் நடித்து கடந்த ஆண்டு வெளிவந்த ‘பீஸ்ட்’ திரைப்படத்தில் இடம்பெற்ற 'அரபிக் குத்து' பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இந்த பாடல் தற்போது இணையத்தில் 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.

பொதுவாகவே சிவகார்த்திகேயன் சமூக ஊடகங்களில் ஈடுபாடுடன் இருப்பவர். புகைப்படங்கள் பதிவிடுவது வாடிக்கையாக வைத்திருப்பவர். இந்நிலையில் சிவகார்த்திகேயன் கடந்த பொங்கல் திருநாளில் தனது குடும்பத்துடன் பொங்கல் விழாவை கொண்டாடினார். குடும்பத்தோடு இருக்தும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார் சிவகார்த்திகேயன்.

actor thalaivaasal vijay daughter weds famous world cup cricketerஅவர் பதிவிட்ட நாளில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வாழ்த்துக்கள் குவிந்தது.தற்போது புகைப்படம் பகிர்ந்து 13 நாட்கள் ஆன நிலையில் இன்ஸ்டாகிராமில் 23 லட்சம் லைக்குகள் மேல் பெற்றுள்ளது. இது தான் தமிழ் நடிகர்கள் பெற்ற அதிகப்படியான லைக்குகள் என அறியப்படுகிறது. இதனையடுத்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தற்போது மீண்டும் அந்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர். பாடல் படங்களை தொடர்ந்து புகைப்படம் வைரலாவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

 

View this post on Instagram

A post shared by Sivakarthikeyan Doss (@sivakarthikeyan)

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்
சினிமா

ரஜினி & கமல் படங்களில் பணியாற்றிய பழம்பெரும் ஸ்டண்ட் இயக்குனர் ஜூடோ ரத்தினம் காலமானார்! சோகத்தில் திரையுலகம்

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!
சினிமா

“என் முதல் படத்திலிருந்து என்னை தேற்றிக்கொடுத்தவர்” -வெற்றிமாறன்... விசாரணை பட நடிகர் திடீர் மரணம் - அஞ்சலி செலுத்திய பிரபலங்கள்!

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ
சினிமா

அடுத்த 10 வருடங்களுக்கு லோகேஷ் கனகராஜின் மாஸ்டர் ப்ளான்... LCU-ன் பிரம்மிப்பான தகவல் கொடுத்த RJபாலாஜி! வைரல் வீடியோ