பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் பரத். தொடர்ந்து வெற்றி படங்கள் தந்த பரத்துக்கு 2019-ம் ஆண்டின் இறுதியில் வெளியான காளிதாஸ் திரைப்படம் மிகப்பெரிய கம்பேக்காக இருந்தது. சென்ற வருட லாக்டவுனில் அமேசான் தயாரித்த டைம் என்ன பாஸ் வெப் சீரிஸில் நடித்து அசத்தினார். 

தற்போது பரத் நடிப்பில் உருவாகியிருக்கும் திரைப்படம் நடுவன். ஷராங்க் இந்த படத்தை இயக்கியுள்ளார். தரன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். அபர்ணா வினோத் மற்றும் கோகுல் இந்த படத்தில் நடித்துள்ளனர். சசிகுமார் இந்த படத்திற்கு ஆர்ட் டைரக்டராக பணிபுரிகிறார். யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ஸ்னீக் பீக் ட்ரைலர் காட்சி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

நடுவன் படம் மலைப் பகுதியில் நடக்கும் திரில்லர் திரைப்படமாகும். படத்தின் மேக்கிங் ஏராளமான சவால்களை கொண்டிருந்தாம். ஸ்டண்ட் காட்சிகளில் நாயகன் மட்டுமல்லாமல் நாயகி அபர்ணா வினோத் மற்றும் குட்டிப் பெண் ஆரத்யா ஆகியோரும் அவர்களே நடித்திருந்தனராம். மழை மற்றும் மூடுபனியை பொருட்படுத்தாமல் சவாலான காட்சிகளில் பணிபுரிந்தார்களாம். 

இந்த படத்தின் படப்பிடிப்பின் போது, ஒரு ஸ்டண்ட் காட்சியின்போது  நடிகர் பரத் கையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்தது. ஓய்வெடுக்க வற்புறுத்தியும், அவர் உடனடியாக படப்பிடிப்பில்  கலந்து கொண்டார். அபர்ணா வினோத் எந்தவொரு டூப்பும் இல்லாமல் சண்டைக் காட்சியில் நடிக்கும் அளவுக்கு தைரியமாக இருந்தார் என்ற செய்தி இணையத்தில் பரவியது. 

இந்நிலையில் படத்தின் பாடல் வீடியோவை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பகிர்ந்துள்ளார். காலை அதிகாலை எனும் இப்பாடல் வரிகளை கார்க்கி எழுதியுள்ளார். சித் ஸ்ரீராம் பாடியுள்ளார். 

இந்த படத்தை தொடர்ந்து பிரபு தேவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ராதே படத்தில் நடித்துள்ளார் பரத். சல்மான் கான் ஹீரோவாக நடிக்க மேகா ஆகாஷ், திஷா பட்டானி, டைகர் ஷ்ரோஃப் ஆகியோர் இந்த படத்தில் உள்ளனர். இந்த வருடம் EID பண்டிகையை முன்னிட்டு இந்த படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.