மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது, இந்த மூன்று சட்டங்களையும் இடைக்காலமாக உச்ச நீதிமன்றம் நிறுத்தி வைத்தது. மத்திய அரசு உரிய நடவடிக்கை விரைவில் எடுக்கவில்லை என்றால் உச்சநீதிமன்ற தலையீட்டு வேளாண் மசோதாக்களை நிறுத்தி வைக்கும் என தெரிவித்தது. இதற்கு பதிலளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் தலையிட அதிகாரம் இல்லை என பதளித்திருந்தது. 


இந்நிலையில் விவசாயப் பிரதிநிதிகளுடனான,  10ஆம் கட்ட பேச்சுவார்த்தையில், வேளாண் சட்டங்களை 18 மாதங்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கத் தயார் என்று தெரிவித்து இருக்கிறது மத்திய அரசு. புதிய சட்டங்கள் தொடர்பாக கூட்டு குழு ஒன்றை அமைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

இதற்கு விவசாய சங்கத்தினர், தங்களுக்குள் விவாதித்து பதிலளிக்கிறோம் என்று தெரிவித்துள்ளனர். மத்திய அரசு விவசாயிகள் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவார்த்தை வருகிற 22ம் தேதி நடைபெறவுள்ளது.