சென்னையில் தமிழ்வழி மென்பொருள் கல்வி நூலை இணையம் மூலம் மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் விழாவை தொடங்கி வைத்த தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ‘’ அதிமுக, தமிழக மக்களின் மனம் அறிந்து ஆட்சி நடத்தி வருகிறது. மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை அதிமுக அரசு மட்டுமே செய்து கொண்டு வருகிறது. அதனால் அனைத்து துறைகளிலுமே தமிழகம் முன்னிலை பெற்று, மத்திய அரசின் பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது.


அதிமுக மூன்றாக உடையும் என்று தெரிவித்த ஸ்டாலின் இருட்டில் சென்று கொண்டிருக்கும் ஒரு மனிதன். இருட்டில் பயப்பட கூடாது என்பதற்காக  விசில் அடித்துகொண்டே செல்வார்கள் சைக்கிள் ஓட்டுவார்கள், அதுப்போல் ஒரு மனநிலையில் இருக்கிறார் ஸ்டாலின். அவர் பாடிக்கொண்டே இருக்கட்டும். ஸ்டாலினின் பயம் தெளிந்தால் தான் நமக்கு நல்லது.


கொரோனா தடுப்பூசி குறித்த காங்கிரஸின் கருத்துகள் அனைத்தும் தேச துரோக செயல். அதிமுக கூட்டணி கட்சிகளுடன் பலமாக உள்ளது.  எங்கள் கூட்டணி சுயமரியாதை உள்ள கூட்டணி” என்றார்.