பள்ளி படிக்கும் காலத்திலேயே திரையுலகில் அறிமுகமாகி அதிகளவு ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை லக்ஷ்மி மேனன். கேரளாவில் இருந்து வந்து தமிழ் சினிமாவை கலக்கிய நடிகைகளில் இவரும் ஒருவர். தமிழில் லக்ஷ்மி மேனன் நடித்த முதல் படம் சுந்தர பாண்டியன். சசிகுமார் ஜோடியாக நடித்து அசத்தியிருப்பார். அதனை தொடர்ந்து விக்ரம் பிரபுவுடன் நடித்த கும்கி படமும் மிகப்பெரிய அளவில் அவரை பிரபலமாக்கியது. அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். 

2015-ல் தல அஜித்தின் தங்கையாக வேதாளம் படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக லக்ஷ்மி மேனன் நடிப்பில் றெக்க படம் 2016-ல் வெளிவந்தது. கல்லூரிப் படிப்பில் கவனம் செலுத்தி வந்த லக்ஷ்மி மேனன் சிறிது காலம் நடிக்காமல் இருந்தார். 

தன்னுடைய உடல் எடையை அதிக அளவு குறைத்து மிகவும் ஒல்லியாக மாறி கம்-பேக் தந்தார். கடந்த சில வாரங்களாக அவர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறது. லக்ஷ்மி மேனனா இப்படி மாறி விட்டார் என பலரும் ஆச்சர்யம் அடைந்து இருக்கிறார்கள்.

கடந்த ஆண்டு கொரோனா லாக்டவுன் நேரத்தில் கூட லக்ஷ்மி மேனன் பரதநாட்டியம் முயற்சி செய்யும் வீடியோக்களை அதிக அளவு சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். அவற்றுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து அவரது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பாக்கினார் லக்ஷ்மி மேனன். 

பொங்கல் விருந்தாய் ஒளிபரப்பான புலிக்குத்தி பாண்டி படத்தில் சூப்பரான ரோலில் நடித்திருந்தார் லக்ஷ்மி மேனன். மாட்டுப் பொங்கல் சிறப்பு படமாக கடந்த 15-ம் தேதி, விக்ரம் பிரபு மற்றும் லக்ஷ்மி மேனன் நடித்த புலிக்குத்தி பாண்டி திரைப்படம் சன் டிவி-யில் ஒளிபரப்பானது. இயக்குனர் முத்தையா இயக்கியிருந்த இந்தப் படத்தில் லட்சுமி மேனன் கதாநாயகியாக நடித்திருந்தார். தியேட்டரில் வெளியாகாமல் நேரடியாக சன் டிவி-யில் ஒளிபரப்பாகி TRP-ல் சாதனை படைத்தது. 

இந்நிலையில் நடிகை லக்ஷ்மி மேனனின் ட்விட்டர் அக்கௌன்ட் முடக்கப்பட்டு தற்போது மீட்கப்பட்ட செய்தி தெரியவந்துள்ளது. இது குறித்து லக்ஷ்மி மேனனும் பதிவு ஒன்றை செய்துள்ளார். அக்கௌன்ட்டை மீட்டாச்சு. I am back என்று கூறியுள்ளார். இதனால் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர் அவரது ரசிகர்கள். சமீபத்தில் நடிகை நஸ்ரியாவின் இன்ஸ்டாகிராம் கணக்கு முடக்கப்பட்ட செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.