விஜய் தொலைக்காட்சியின் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி பரபரப்பாக நடைபெற்று வருகிறது. நிரூப், தாமரைச்செல்வி, ஐக்கி பெர்ரி, இமான் அண்ணாச்சி, பாவ்னி, பிரியங்கா ஆகியோர் இந்த வாரத்திற்கான எலிமினேஷனுக்கு நாமினேட் செய்யப்பட்டுள்ளனர்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் வைல்ட் கார்ட் என்ட்ரியாக கடந்த வார இறுதியில் முன்னதாகவே எலேமினேட் செய்யப்பட்ட அபிஷேக் ராஜா மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்கு திரும்பிய நிலையில், இந்த வாரத்தின் தொடக்கத்தில் பிரபல நடன இயக்குனர் அமீர் 2-வது வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழைந்தார்.

இதனை அடுத்து இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் டாஸ்க் தொடங்கியது. இந்த பள்ளிக்கூடம் டாஸ்க்கில் ராஜு, அபிஷேக் மற்றும் அமீர் ஆகியோர் ஆசிரியர்களாகவும் சிபி வார்டன்-ஆகவும் மற்ற அனைத்து ஹவுஸ் மேட்ஸ்களும் மாணவர்களாகவும் டாஸ்க்கை தொடங்கினர். விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் அனல் பறக்கும் வாக்குவாதங்களோடு லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்று முடிந்தது.

இதனை அடுத்து 3-வது வைல்ட் கார்டு என்ட்ரியாக நடிகர் சஞ்சீவ் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். தளபதி விஜய் அவர்களின் நெருங்கிய நண்பரும் பிரபல நடிகருமான சஞ்சீவின் என்ட்ரி பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சஞ்சீவ் பிக் பாஸ் வீட்டுக்குள் களமிறங்கும் புதிய ப்ரோமோ வீடியோ இதோ…