சித்திரை செவ்வானம் பட ட்ரைலர் வெளியீடு!
By Anand S | Galatta | November 24, 2021 19:24 PM IST
தமிழ் சினிமாவின் மிக முக்கிய இயக்குனரும் நடிகருமான சமுத்திரகனி, இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் நான் கடவுள் இல்லை மற்றும் இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கத்தில் யாவரும் வல்லவரே ஆகிய திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இத்திரைப்படங்களின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
மேலும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன்-2, தனுஷின் மாறன், சிவகார்த்திகேயனின் டான், ஐயப்பனும் கோஷியும் படத்தின் தெலுங்கு ரீமேக்கான பிம்லா நாயக், மகேஷ்பாபுவின் சர்க்காரு வாரி பாட்டா மற்றும் அந்தாதுன் படத்தின் தமிழ் ரீமேக்காக பிரசாந்த் நடித்துள்ள அந்தகன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடிகர் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அந்த வகையில் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நேரடியாக ஜீ5 OTT தளத்தில் ரிலீஸாகவுள்ளது சமுத்திரகனி நடித்துள்ள சித்திரை செவ்வானம் திரைப்படம். இயக்குனர் விஜய் தயாரிப்பில், சித்திரை செவ்வானம் படத்தில் முன்னணி ஸ்டண்ட் இயக்குனர் ஸ்டண்ட் சில்வா முதல்முறை இயக்குனராக அறிமுகமாகியுள்ளார்.
சமுத்திரக்கனியுடன் இணைந்து ரீமா கல்லிங்கல் , பூஜா கண்ணன் ஆகியோர் நடித்துள்ள சித்திரை செவ்வானம் படத்திற்கு சாம்.சி.எஸ். இசையமைக்க, மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் சித்திரை செவ்வானம் திரைப்படத்தின் பரபரப்பான ட்ரைலர் இன்று வெளியானது. அந்த ட்ரைலர் இதோ…