இந்திய சினிமாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்கும் நடிகர் சீயான் விக்ரம், இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் மிரட்டலான பல கெட்டப்களில் நடித்த கோப்ரா திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 31-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று உலகெங்கும் பல மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸானது.

செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாரித்துள்ள கோப்ரா திரைப்படத்தில் கேஜிஎஃப் படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி கதாநாயகியாக நடிக்க, பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், மிருனாளினி ரவி, ரோஷன் மேத்யூ,இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஹரிஷ் கண்ணன் ஒளிப்பதிவு செய்ய இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட்ட கோப்ரா திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்த போதும் படத்தின் நீளம் படத்தின் விறுவிறுப்பை குறைப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து மொத்த படத்திலிருந்து இருபது நிமிடங்கள் குறைக்கப்பட்டது வெர்ஷனில் கோப்ரா திரைப்படம் தொடர்ந்து திரையிடப்பட்டது.

இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கோப்ரா திரைப்படம் குறித்து கேட்கப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கும் எதிர்மறை விமர்சனங்களுக்கும் இயக்குனர் அஜய் ஞானமுத்து பதிலளித்துள்ளார். படத்தின் நீளம், க்ளைமேக்ஸ், திரைக்கதை, கோப்ரா படத்தின் இரண்டாம் பாகம் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு இயக்குனர் அஜய் ஞானமுத்து அளித்த பதில்கள் இதோ…
ajay gnanamuthu answers to the fans about cobra ajay gnanamuthu answers to the fans about cobra ajay gnanamuthu answers to the fans about cobra