தெலுங்கு சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவரான விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. முன்னணி தெலுங்கு திரைப்பட இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக வெளிவந்த லைகர் படத்தில் விஜய் தேவர்கொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார்.

பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே கதாநாயகியாக நடித்துள்ள லைகர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், ரோனிட் ராய் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, மிரட்டலான முக்கிய கதாபாத்திரத்தில் உலகப்புகழ் பெற்ற குத்துச்சண்டை சாம்பியனான மைக் டைசன் நடித்துள்ளார்.விஷ்ணு சர்மா ஒளிப்பதிவில் லைகர் திரைப்படத்தின் பாடல்களுக்கு தனிஷ்க் பக்ச்சி இசையமைக்க பிரபல இசையமைப்பாளர் மணிஷர்மா பின்னணி இசை சேர்த்துள்ளார்.

நடிகை சார்மி மற்றும் பூரி ஜெகநாத் அவர்களின் பூரி கனெக்ட்ஸ் மற்றும் தர்மா புரோடக்சன்ஸ் இணைந்து தயாரித்த லைகர் திரைப்படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் நிறுவனம் வழங்குகியது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான லைகர் திரைப்படம் நிறைய எதிர்மறை விமர்சனங்களால் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்தது.

இந்நிலையில் எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலியாக லைகர் திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான சார்மி சமூக வலைதளங்களில் இருந்து தற்காலிகமாக விலகி இருப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் “விரைவில் புதிய உத்வேகத்துடன் பெரியதாய் எழுந்து வருவோம்…” எனவும் குறிப்பிட்டுள்ளார். சார்மியின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…
 

Chill guys!
Just taking a break
( from social media )@PuriConnects will bounce back 😊
Bigger and Better...
until then,
Live and let Live ❤️

— Charmme Kaur (@Charmmeofficial) September 4, 2022