தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் விஷ்ணு விஷால் தனது திரைப்பயணத்தில் நடித்த வெண்ணிலா கபடி குழு மற்றும் ஜீவா உள்ளிட்ட விளையாட்டை மையப்படுத்தி திரைப்படங்களின் வரிசையில், தற்போது கட்டா குஸ்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகின்றன.

முன்னதாக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக விஷ்ணு விஷால் நடித்துள்ள மோகன்தாஸ் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வரிசையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் தயாராகவுள்ள திரைப்படம் ஆர்யன்.

இயக்குனர் பிரவீன் இயக்கத்தில் உருவாகும் ஆர்யன் திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, ஷ்ரதா ஸ்ரீநாத் மற்றும் வாணிபோஜன் இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். ராட்சசன் திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் க்ரைம் திரில்லர் படத்தில், காவல்துறை அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கும் ஆர்யன் படத்தை விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

விஷ்ணு சுபாஷ் ஒளிப்பதிவில், சான் லோகேஷ் படத்தொகுப்பு செய்யும் ஆர்யன் திரைப்படத்திற்கு சாம்.CS இசையமைக்கிறார். தமிழ்,தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் திரைப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில் ஆர்யன் திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். ஆர்யன் திரைப்படத்தின் படபூஜை புகைப்படங்கள் மற்றும் வீடியோ இதோ…
 

The special pooja video of #Aaryan, out now. Catch the glimpses from the pooja! @TheVishnuVishal @selvaraghavan, @shraddhasrinath, @vanibhojanoffl.

Directed by @adamworx.@vishnu_subhash @SamCSmusic @Sanlokesh @silvastunt #indulalkaveed @SVynod @kunaldaswani @prathool pic.twitter.com/zYHLw7jotW

— VishnuuVishalStudioz (@VVStudioz) September 3, 2022

A bond only a few will understand..#Aaryan
Thank you @Guttajwala for d clap with Aryan..
This will always be a super special movie... pic.twitter.com/AWiMn5HwjS

— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) September 3, 2022