தமிழ் திரை உலகின் மிக முக்கிய இயக்குனராக தொடர்ந்து சிறந்த படைப்புகளை வழங்கி வரும் இயக்குனர் வெற்றிமாறன் அடுத்ததாக நடிகர் சூர்யா கதாநாயகனாக நடிக்கும் வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார். ஜல்லிக்கட்டை மையப்படுத்தி தயாராகும் வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

இதனிடையே இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மற்றும் சூரி இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் திரைப்படம் விடுதலை. பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் சிறுகதையை தழுவி தயாராகி வரும் விடுதலை திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று

RS இன்ஃபோடெயின்மெண்ட் சார்பில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரிப்பில் உருவாகும் விடுதலை திரைப்படத்தில் கௌதம் வாசுதேவ் மேனன், பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், ராஜீவ் மேனன் மற்றும் சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.கலை இயக்குனர் ஜாக்சன் கலை இயக்கத்தில் சிறுமலையின் மலை பகுதியில் விடுதலை திரைப்படத்திற்காக பிரத்யேகமாக ஒரு கிராமத்தை செட் அமைக்கப்பட்டுள்ளது

மேலும் சிறுமலை பகுதியை சேர்ந்த மக்களையும் குழந்தைகளையும் விடுதலை படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் நடிக்க வைத்துள்ளார். R.வேல்ராஜ் ஒளிப்பதிவில் இசைஞானி இளையராஜா இசையமைக்கும் விடுதலை திரைப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்நிலையில் வெற்றிமாறனின் பிறந்த நாளான இன்று செப்டம்பர் 4ஆம் தேதி விடுதலை படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
 

Happy birthday to the immensely talented #VetriMaaran 🎉🎊

On this special day, team #Viduthalai is happy to unveil that this film will be released in two parts.@VijaySethuOffl @sooriofficial @ilaiyaraaja @elredkumar @Udhaystalin @BhavaniSre @rsinfotainment @PeterHeinOffl pic.twitter.com/hnyOyB6WOg

— Red Giant Movies (@RedGiantMovies_) September 4, 2022