புகழ்பெற்ற எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ளன. இரண்டு பாகங்களாக வெளிவரவுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாக உள்ளது.

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சீயான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யாராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ரஹ்மான், விக்ரம் பிரபு, பிரபு ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிவர்மன் ஒளிப்பதிவில் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

முன்னதாக வெளிவந்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் டீசர் மற்றும் பொன்னி நதி & சோழா சோழா பாடல்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ட்ரைலர் மற்றும் மற்ற பாடல்கள் நாளை செப்டம்பர் 6-ம் தேதி நடைபெறும் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழாவில் வெளியாகவுள்ளன.

இதனிடையே கடந்த சில தினங்களாக பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் போஸ்டர்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் பிரகாஷ்ராஜ் நடித்துள்ள சுந்தரசோழர், ரஹ்மான் நடித்துள்ள மதுராந்தகர் மற்றும் ஜெயசித்ரா நடித்துள்ள செம்பியன் மாதேவி கதாபாத்திரங்களை கொண்ட புதிய போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது. அந்த போஸ்டர் இதோ…
 

Every rose has its thorns. The Emperor, the Queen Mother & the Son who wants it all!

Meet @prakashraaj as Sundara Chozhar, Jayachitra as Sembiyan Maadevi & @actorrahman as Madhurantakan!#PS1 #PonniyinSelvan #CholasAreComing#ManiRatnam @arrahman @LycaProductions @Tipsofficial pic.twitter.com/MhHbVMvTRn

— Madras Talkies (@MadrasTalkies_) September 4, 2022