Negativity க்கு விஜய் சேதுபதியின் ரியாக்ஷன்! - Boycott பிரசாரத்திற்கு பதிலடி.. வீடியோ உள்ளே..

Boycott பிரசாரத்திற்கு பதிலடி கொடுத்த விஜய் சேதுபதி - Actor Vijay Sethupathi reacts to bollywood boycott culture | Galatta

தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் சேதுபதி தற்போது தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் நடித்து வருகிறார். அதன்படி விஜய் சேதுபதியின் முதல் இந்தி படமான ‘ஃபர்ஸி’ தொடர் வரும் பிப்ரவரி 10 ம் தேதி அமேசான் பிரைமில் வெளிவரவுள்ளது. ஃபர்ஸி தொடரில் கதாநாயகனாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாகித் கபூர் நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து ராஷி கண்ணா, கே.கே.மேனன் , ரெஜினா கேசேந்திரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். பிரபல இந்தி தொடரான ‘ஃபேமிலி மேன்’ தொடரை இயக்கிய கூட்டணி இயக்குனர்களான டி.கே மற்றும் ராஜ் இந்த தொடரை எழுதி இயக்கியுள்ளனர்.

கள்ள நோட்டு தடுப்பு பிரிவில் அதிரடியாய் களம் இறங்கும் விஜய் சேதுபதி . ஷாகித் கபூர் குழுவினரை பிடிக்கும் கதைகளத்தில் எலியும் பூனையும் திரைக்கதையில் அமைந்துள்ள ஃபர்ஸி தொடரின் டிரைலர் முன்னதாக வெளிவந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது. குறிப்பாக தென்னிந்திய ரசிகர்கள் விஜய் செதுபதிக்காகவே ஒரு தனி எதிர்பார்ப்பை இந்த தொடரின் மீது வைத்துள்ளனர்  இந்நிலையில் ஃபர்ஸி  தொடர் வெளியீட்டையடுத்து ஃபர்ஸி குழு பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.

அதில் சமீபத்தில் படங்களை முற்றுக்கையிடும் சிலர் boycott என்று பிரச்சாரம் செய்வது குறித்து உங்கள் கருத்து என்ன என்ற கேள்வி கேட்கபட்டது. அதற்கு விஜய் சேதுபதி,

“எப்பவும் ஒரு ஆக்ஷனுக்கு எதிரா ஒரு ரியாக்ஷன் நடக்கும். புதுசா ஒரு விஷயம் நடந்தா ஒரு பயம் வரும். இப்போ அது பழக்கமாகிடுச்சு.. அப்பறம் boycott னு சொல்றவங்க யாருனு தெரிஞ்சுடும். அவங்க என்ன காரணத்துக்கு பேசறாங்க ன்னு தெரிஞ்சிடும்.. கொஞ்சம் நாள் பிறகு அவங்களுக்கும் அந்த விஷயத்துக்கும் மரியாதை இல்லாம போயிடும்.. இந்த மாதிரியான நெகடீவ் விமர்சனங்கள், எல்லா காலத்திலும் எப்பவும் நடந்துட்டுதான் இருக்கும். நம்ம செய்ய வேண்டிய வேலைய செஞ்சிட்டு போயிடனும் அந்த விஷயத்துல ரியாக்ட் பண்ணாம இருக்கறது தான் நல்லதுனு தோனுது” என்று குறிப்பிட்டார்.

கடந்த சில ஆண்டுகளாக சில குழுவினர் சில படங்களுக்கு எதிராகவும் சில நட்சத்திரங்களுக்கு அல்லது சில நிருவனத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். இதன் எதிரொலியாய் இணையத்தில் boycott என்ற ஹேஷ்டேக் வைரலாவது வழக்கமாகி வருகிறது. குறிப்பாக பாலிவுட்திரையுலகில் இது தீவிரமாக நடைபெற்று வருகிறது, தற்போது பாலிவுட் திரைப்படங்கள் திரையரங்குகளுக்கு வருவதை விட இணையத்தில் வருவது அதிகமாக உள்ளது. இது boycott எதிரொலியாக இருக்க கூடும் என்று விமர்சகர்கள் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் இந்த தெளிவான விளக்கம் தற்போது இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

மேலும் பத்திரிக்கையாளர் சந்திப்பில்  ஃபர்ஸி படக்குழுவினர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்கள் கொண்ட முழு வீடியோ இதோ.

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்
சினிமா

வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்

அஜித்தின் வேதாளம் பட கெட்டப்பில் மாஸ் காட்டும் சிரஞ்சீவி – வைரலாகும் சிரஞ்சீவி லுக் இதோ..
சினிமா

அஜித்தின் வேதாளம் பட கெட்டப்பில் மாஸ் காட்டும் சிரஞ்சீவி – வைரலாகும் சிரஞ்சீவி லுக் இதோ..

1.30 நிமிஷம் single shot...! ஒரே Take ல் மிரட்டி விட்ட தளபதி விஜய் – ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி
சினிமா

1.30 நிமிஷம் single shot...! ஒரே Take ல் மிரட்டி விட்ட தளபதி விஜய் – ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி