Hatrickக்கு தயாராகும் வெற்றி கூட்டணி... சூப்பர் ஹிட் இயக்குனருடன் இணையும் விஷ்ணு விஷாலின் அடுத்த அதிரடி படம்! அட்டகாசமான அறிவிப்பு

மீண்டும் இணையும் விஷ்ணு விஷால் - இயக்குனர் ராம்குமார் கூட்டணி,vishnu vishal joins with director ram kumar for 3rd time | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷ்ணு விஷால் நடிப்பில் கடைசியாக வெளிவந்த கட்டா குஸ்தி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. முன்னதாக இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள மோகன்தாஸ் திரைப்படம் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகிறது.

அடுத்ததாக இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் கிரிக்கெட்டை மையப்படுத்திய ஸ்போர்ட்ஸ் திரைப்படமாக தயாராகும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிக முக்கியமான கௌரவ வேடத்தில் நடிக்கிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் லால் சலாம் திரைப்படம் சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது. 

தொடர்ந்து இயக்குனர் பிரவீன்.K இயக்கத்தில் க்ரைம் த்ரில்லர் திரைப்படமாக தயாராகும் ஆர்யன் திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் தற்போது நடித்து வருகிறார். இதனிடையே தனது திரைப்பயணித்தில் குறிப்பிடப்படும் சிறந்த திரைப்படங்களாக அமைந்த முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ராம்குமார் உடன் மீண்டும் இணைகிறார் விஷ்ணு விஷால்.

ரசிகர்களால் நல்ல நகைச்சுவை திரைப்படமாக கொண்டாடப்பட்ட முண்டாசுப்பட்டி மற்றும் விறுவிறுப்பான சைக்கோ த்ரில்லர் திரைப்படமாக  ரசிக்கப்பட்ட ராட்சசன் படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குனர் ராம்குமார் - விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகும் இந்த திரைப்படத்தை தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. நடிகர் விஷ்ணு விஷாலின் 21 வது திரைப்படமாக தயாராகும் இந்த புதிய #VV21 திரைப்படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு இதோ…
 

We are extremely happy to announce our next film with the blockbuster combo of the supremely talented @TheVishnuVishal & the Maverick director @dir_ramkumar for their HATTRICK union #VV21 💥 🥁 @teamaimpr pic.twitter.com/qsTpB45qbd

— Sathya Jyothi Films (@SathyaJyothi) January 20, 2023

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!
சினிமா

2023ல் ரசிகர்களுக்கு பக்கா விருந்து... இந்தியன்2, தளபதி67, AK62 படங்களின் ரிலீஸ் குறித்த அட்டகாசமான தகவல் இதோ!

இளைய தளபதி-னு 60வயசு வரைக்கும் வெச்சுக்கலாம்... விஜய் குறித்து புதுப்பட பூஜையில் பேசிய சதீஷ்! வைரல் வீடியோ
சினிமா

இளைய தளபதி-னு 60வயசு வரைக்கும் வெச்சுக்கலாம்... விஜய் குறித்து புதுப்பட பூஜையில் பேசிய சதீஷ்! வைரல் வீடியோ

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!