சேதுபதி படத்துல நல்ல போலீஸ்... இதுல எப்படி? முதல் அதிரடி வெப் சீரிஸ் குறித்து மனம்திறந்த விஜய் சேதுபதி! வீடியோ இதோ

ஃபர்ஸி வெப் சீரிஸ் குறித்து மனம் திறந்த விஜய் சேதுபதி,vijay sethupathi opens about farzi web series | Galatta

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராகவும் சிறந்த நடிகராகவும் தரமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதல் முறையாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி உடன் இணைந்து நடித்த விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளிவர தயாராகி இருக்கிறது. அதன் முதல் பாகம் வருகிற மார்ச் மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் அதிரடி ஆக்சன் திரைப்படமாக நடிகர் சந்திப் கிஷன் நடிப்பில் தயாராகியுள்ள மைக்கேல் படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ளார். பேன் இந்தியா படமாக மைக்கேல் திரைப்படம் வருகிற பிப்ரவரி 3ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது.

தமிழில் மட்டுமல்லாது தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் விஜய் சேதுபதி, அட்லீ - ஷாருக்கான் கூட்டணியில் தயாராகும் ஜவான், கத்ரீனா கைப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ், மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக மும்பைக்கர், மற்றும் மௌன திரைப்படமான காந்தி டாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இதனிடையே முதல்முறையாக வெப் சீரிஸிலும் களமிறங்கிய விஜய் சேதுபதி ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி.கே இயக்கத்தில் உருவாகி இருக்கும் FARZI வெப் சீரிஸில் ஹிந்தி நடிகர் சாஹித் கபூர் உடன் இணைந்து முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். 

மேலும் கே கே மேனன், ராஷி கண்ணா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். FARZI வெப் சீரிஸ் வருகிற பிப்ரவரி 10ஆம் தேதி முதல் நேரடியாக அமேசான் பிரைம் வீடியோவில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்நிலையில் ஃபர்ஸி வெப் சீரிஸ் குழுவினர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்நிலையில் ஃபர்ஸி வெப் சீரிஸ் குழுவினர் நமது கலாட்டா சேனலுக்கு அளித்த பிரத்தியேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அவர்களிடம் சேதுபதி திரைப்படத்தில் நல்ல போலீஸாக நடித்தீர்கள் இந்த வெப் சீரீஸில் நல்ல போலீஸா கெட்ட போலீஸா என்பது தெரியவில்லை… பொதுவாக சில திரைக்கதைகளில் ஹீரோ ஆயிரம் கோடி கொள்ளையடித்தால் அதில் எனக்கு 500 கோடி உனக்கு 500 கோடி என கிளைமாக்ஸில் பிரித்துக் கொள்வார்கள் அது மாதிரி இந்த வெப் சீரிஸில் ஏதாவது ட்விஸ்ட் எதிர்பார்க்கலாமா எனக் கேட்டபோது, “சார் நீங்கள் இன்னொரு படம் பார்த்துவிட்டு என்னிடம் கதை கேட்கிறீர்கள்… நான் என்ன சார் பதில் சொல்லட்டும். மேலும் இது அப்படிப்பட்டது அல்ல. இயக்குனர்கள் ராஜ் மற்றும் டி கே சொன்னது போல இது மிகவும் பொறுப்புடன் எடுக்கப்பட்டது. இந்த கள்ள நோட்டுகள் பற்றி மிகவும் பொறுப்புடன் எடுக்கப்பட்டது. கதையை சொல்ல வேண்டும் என்றால் எல்லாம் முடித்து விட்டு வாருங்கள் சார், உட்கார்ந்து பேசுவோம். மொத்த கதையும் சொல்கிறேன். இந்த நிகழ்ச்சியில் சொல்ல முடியாது” என பதிலளித்துள்ளார். அட்டகாசமான அந்த வீடியோ இதோ…
 

இளைய தளபதி-னு 60வயசு வரைக்கும் வெச்சுக்கலாம்... விஜய் குறித்து புதுப்பட பூஜையில் பேசிய சதீஷ்! வைரல் வீடியோ
சினிமா

இளைய தளபதி-னு 60வயசு வரைக்கும் வெச்சுக்கலாம்... விஜய் குறித்து புதுப்பட பூஜையில் பேசிய சதீஷ்! வைரல் வீடியோ

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!
சினிமா

சமந்தா - வாரிசு தயாரிப்பாளர் கூட்டணியின் பிரம்மாண்ட படம்... மனதை கவரும் ரம்மியமான வீடியோ இதோ!

சினிமா

"தனுஷின் 50வது படம்!"- திருச்சிற்றம்பலம் வெற்றியை தொடர்ந்து மீண்டும் இணையும் பிரம்மாண்ட கூட்டணி! விவரம் உள்ளே