1.30 நிமிஷம் single shot...! ஒரே Take ல் மிரட்டி விட்ட தளபதி விஜய் – ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

வாரிசு படத்தின் ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி - Varisu Dop Karthick palani about vijay dance in ranjithame song | Galatta

உலகெங்கிலும் ஐந்தே நாளில் 150 கோடி வசூல் படைத்து இன்னும் திரையரங்குகளை ஹவுஸ் புல்லாக வைத்திருக்கும் விஜயின் வாரிசு திரைப்படம் மக்களின் பெரும் ஆதரவை பெற்று வருகிறது இந்நிலையில் படம் குறித்தும் படத்தில் விஜயுடன் பணியாற்றிய அனுபவும் குறித்தும் வாரிசு பட ஒளிப்பதிவாளர் காரத்திக் பழனி நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.

இதில் ரஞ்சிதமே பாடல் படப்பிடிப்பு குறித்தும் கடைசி 1.30 நிமிடங்களில் எடுக்கப்பட்ட single shot குறித்த கேள்விக்கு ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி அவர், “ஒரே டேக்கில் அந்த 1.30 நிமிட பகுதி முடிக்கப்பட்டது, ஒரு இரண்டு முறை பயிற்சி செய்துவிட்டு ஒரே டேக்கில் அந்த காட்சியை எடுத்தோம். காலையில் வந்தவுடனே எல்லாம் தயாராக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொண்டோம். 1.30 நிமிட நீளத்தை திரும்பவும் எடுக்கணும்னு நாங்க நினைக்கல.. அதனால முன்னெச்சரிக்கையாக இருந்தோம். எங்கள் பக்கம் தவறு நடக்காமல் பார்த்துக் கொண்டோம். விஜய் அண்ணா படபிடிப்பு தளத்திற்கு வந்து அங்கு ஏற்பாடு செய்துள்ள காட்சியை புரிந்து கொண்டு ஒரே டேக்கில் முடித்துக் கொடுத்து விட்டார்” என்றார்.

மேலும் இந்த படம் உங்களிடம் முதலில்  வரும்போது தெலுங்கு படமாக வந்ததா? தமிழ் படமாக வந்ததா? என்ற கேள்விக்கு, “நானும் முதலில் தமிழ் தெலுங்கு பைலிங்குவலில் எடுக்கப்படும் என்று நினைத்தேன். அதன்பின் கதை விவாதத்தில் தான் தெளிவாக புரியவந்தது இது முழுக்க முழுக்க தமிழில் எடுக்கப்படும் படம் தான். தெலுங்கில் டப் தான் செய்யவுள்ளோம்.” என்றார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி.

பொதுவாகவே விஜய் நடிப்பில் மட்டுமல்லாமல் நடனத்திலும் சிறந்து விளங்கக் கூடியவர். தனிச்சிறப்பான அவரது நடனத்திற்கே தனி ரசிகர் பட்டாளம் வைத்திருப்பவர். ஒரே டேக்கில்  பல படங்களில் பல பாடல்களில் ஆடி கவனத்தை ஈர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் தில் ராஜு வின் ஸ்ரீ வெங்கடேஸ்வரா தயாரிப்பில் இயக்குனர் வம்சி பைடிபள்ளி இயக்கி விஜய் நடித்து வெளிவந்த வாரிசு திரைப்படம் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகி மக்களின் அமோக வரவேற்பை பெற்றது. இந்தியா மட்டுமல்லாமல் உலகெங்கிலும் முக்கிய நாடுகளிலும் விஜயின் வாரிசு திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தமன் இசையில் குதூகலமான பாடல்கள் பட்டிதொட்டியெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கிறது குறிப்பிடத்தக்கது, மேலும் விஜயுடன் இணைந்து ராஷ்மிகா மந்தனா, ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகி பாபு, ஷ்யாம், சங்கீதா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்துள்ள இப்படம் அனைத்து தரப்பு மக்களையும் திருப்திபடுத்தி வருகிறது.

வாரிசு திரைப்படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களை வாரிசு திரைப்பட ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி நமது கலாட்டா மீடியா பேட்டியில் பகிர்ந்துள்ள முழு வீடியோ இதோ.

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ –   ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.
சினிமா ஸ்பெஷல்ஸ்

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ – ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ – அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் இந்தி ரீமேக்.. ராஜமௌலி Reference..
சினிமா

அல்லு அர்ஜுனின் அலா வைகுந்தபுரம்லோ – அட்டகாசமான அதிரடி காட்சிகளுடன் இந்தி ரீமேக்.. ராஜமௌலி Reference..