வேகமெடுக்கும் விஜய் - லோகேஷ் கனகராஜ் அதிரடி கூட்டணியின் தளபதி67 பட ஷூட்டிங்! வெறித்தனமான அப்டேட்

விஜய் - லோகேஷ் கனகராஜின் தளபதி 67 பட ஷூட்டிங் அப்டேட்,dhananjayan shared lokesh kanagaraj vijay in thalapathy67 shooting update | Galatta

தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருந்த தளபதி விஜயின் வாரிசு மற்றும் அஜித்குமாரின் துணிவு ஆகிய திரைப்படங்கள் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பொங்கல் வெளியீடாக ரிலீஸாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன. இதில் குறிப்பாக வாரிசு படத்தின் ரிலீஸுக்காக பலரும் ஆவலோடு காத்திருந்ததற்கு மற்றொரு காரணமும் உண்டு. அதுதான் தளபதி 67.

இந்திய திரையுலகில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தமிழ் திரைப்படமாக, சமூக வலைதளங்களில் இடைவிடாது பேசப்படும் திரைப்படமாக உலாவும் தளபதி 67 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வாரிசு படத்தில் ரிலீஸுக்கு பிறகு வரும் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்த நிலையில், அடுத்த சில தினங்களில் வருகிற ஜனவரி 26 ஆம் தேதி தளபதி 67 படத்தின் அறிவிப்பு ப்ரோமோ வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தளபதி 67 படத்தின் படப்பூஜை ஏவிஎம் ஸ்டுடியோவில் நடைபெற்ற நிலையில், சமீபத்தில் படப்பிடிப்பும் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. தளபதி விஜயுடன் மீண்டும் நடிகை திரிஷா நீண்ட இடைவெளிக்குப் பிறகு தளபதி 67 படத்தில் கதாநாயகியாக நடிக்க பாலிவுட் நடிகர் சஞ்சய்தத், ஆக்சன் கிங் அர்ஜுன், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், இயக்குனர் மிஷ்கின், மன்சூர் அலிகான், ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

மேலும் மலையாள நடிகர் ப்ரித்விராஜ் மற்றும் கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி ஆகியோரும் தளபதி 67 படத்தில் இணைய உள்ளதாக தெரிகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே நமது கலாட்டா சேனலுக்கு பிரத்தியேக பேட்டி அளித்த தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்கள் தளபதி 67 பட ஷூட்டிங் குறித்த ருசிகர தகவலை பகிர்ந்து கொண்டார். 

முன்னதாக தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டதா? என்ன நிலையில் இருக்கிறது? என கேட்டபோது, “தொடங்கிவிட்டது, படப்பிடிப்பு தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. அடுத்த கட்ட படப்பிடிப்பை வரும் ஜனவரி 20ம் தேதி(இன்று) முதல் ஆரம்பிக்கிறார்கள். இடைவிடாமல் அந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்ட தனஞ்ஜெயன் அவர்களின் அந்த முழு பேட்டி இதோ…
 

‘இந்த combo புதுசா இருக்கே..’ - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்
சினிமா

‘இந்த combo புதுசா இருக்கே..’ - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

 ‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..
சினிமா

‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..