“பொன்னியின் செல்வனுக்கு முன்பே மணிரத்னம் படத்தில் நான் நடிக்க வேண்டியது..” – சரத்குமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல்..

இயக்குனர் மணிரத்னம் குறித்து நடிகர் சரத்குமார் பகிர்ந்த தகவல் இதோ - Actor sarathkumar about director maniratnam | Galatta

உலகளவில் வசூல் குவித்து வரும் விஜய் நடித்த வாரிசு திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக பத்து நாட்களை எட்டியுள்ளது. வம்சி இயக்கத்தில் விஜய் உடன் இணைந்து சரத்குமார், ஜெயசுதா, ராஷ்மிகா மந்தனா, பிரகாஷ் ராஜ், ஷ்யாம், யோகிபாபு உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். குடும்ப உணர்வுகளை மையப்படுத்தி உருவாகியுள்ள வாரிசு படத்திற்கு பெருவாரிய வரவேற்பு பட்டி தொட்டி எங்கிலும் கிடைத்து வருகிறது. இந்நிலையில் வாரிசு படத்தில் விஜய் க்கு அப்பாவாக நடித்த நடிகர் சரத்குமார் அவர்கள் கலாட்டா தமிழ் பிரத்யேக பேட்டியில் கலந்து கொண்டார்.

இதில் அவர் கடந்து வந்த திரைப்பயணங்கள், வாரிசு படத்தில் நடித்த அனுபவம் போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். பேட்டியில் பொன்னியின் செல்வன் படத்தில் பழுவேட்டரையராக நடித்த அனுபவம் எப்படி இருந்தது. படம் முடிந்து உங்களுக்கு கிடைத்த வரவேற்புகள் எப்படி இருந்தது என்று சரத்குமாரிடம் கேள்வி கேட்கப்பட்டது,

அதற்கு அவர், “பொன்னியின் செல்வன் காவியத்தை படித்தவர்கள் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திரம் யார் செய்திருப்பார் என்ற ஆவல் இருந்திருக்கும்.. குறிப்பா ரஜினி சார் அந்த கதாபாத்திரத்தை ஸ்லாகித்து பேசியது மேலும் ஆவலை கூட்டியது. ரஜினி சார் நடிக்கனும் னு ஆசைபட்ட கதாபாத்திரத்திரம் அது. அப்போ பெரிய பழுவேட்டரையர் எனக்கு கிடைத்தது பெரிய வாய்ப்பு தான்.

அந்த கதையில் பெரிய பழுவேட்டரையர் கதாபாத்திரத்திரம் மிக முக்கியமான பாத்திரம் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கான வாய்ப்பு அதிகமாக இருந்தது. படம் பார்த்து விட்டு ரஜினிகாந்த் அவரும் சொன்னார் 'உங்கள் கண்கள் எல்லா காட்சியிலும் சிறப்பாக நடித்திருக்கிறது' என்றார். மேலும் படத்தில் நடித்த எல்லோரையும் அவர் தொலைபேசியில் அழைத்து பாராட்டினார்.‌அதன்பின் தம்பி சூர்யாவும் வாழ்த்துக்களுடன் பூங்கொத்து அனுப்பிருந்தார். விக்ரம் படம் பார்த்து விட்டு என்னிடம் 20 நிமிடம் பேசியிருந்தார். இதெல்லாம் ஒரு நல்ல உறவு, நட்புறவு, மரியாதை எல்லாம் உறுதிபடுத்துகிறது. இயக்குனர் மணிரத்னம் அவர்களோட படைப்புகளில் நான் ஒரு பங்காக  இருப்பது மிகப்பெரிய வாய்ப்பு எனக்கு.‌ ‘இருவர்’ படத்திலும் நான் நடிக்க வேண்டியது. அதன்பிறகு ‘தசரதன்’, ‘வானம் கொட்டட்டும்’ படங்கள் அவருடை புரொடக்ஷன்ல நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ” என்று குறிப்பிட்டார்.

தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகர் சரத்குமார் கிட்டத்தட்ட 60 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் சம கால திரையுலகில் முக்கிய குணசித்திர வேடங்களை ஏற்று நடிப்பதில் முன்னணியாக இருக்கிறார். பொன்னியின் செல்வன், வாரிசு படத்தை தொடர்ந்து அண்மையில் சரத்குமார் ‘பரம்பொருள்’, ‘நிறங்கள் மூன்று’, ‘தி ஸ்மைல் மேன்’ போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.  

மேலும் பல சுவாரஸ்மான தகவல்களை பிரபல நடிகர் சரத்குமார் பகிர்ந்த வீடியோ இதோ.. 

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

'ஹெலிகாப்டர் சேஸிங்..' துணிவு படத்தோட இன்னொரு கிளைமேக்ஸ் - சுப்ரீம் சுந்தர் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்து மிறீய மாணவர்.. படக்குழு அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ இதோ..
சினிமா

சூரரைப் போற்று நடிகை அபர்ணா பாலமுரளியிடம் அத்து மிறீய மாணவர்.. படக்குழு அதிர்ச்சி - வைரலாகும் வீடியோ இதோ..

விறுவிறுப்பான திரில்லர் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி  - மக்கள் மத்தியில் கவனம் பெரும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் இதோ..
சினிமா

விறுவிறுப்பான திரில்லர் களத்தில் ஆர்.ஜே.பாலாஜி - மக்கள் மத்தியில் கவனம் பெரும் ரன் பேபி ரன் படத்தின் டிரைலர் இதோ..