போட்றா வெடிய.. சூர்யாவை இயக்கபோகும் பிரபல இயக்குனர் இவரா? - அட்டகாசமான அப்டேட்.. வைரலாகும் வீடியோ இதோ..

சூர்யா படத்தை இயக்க போகும் ஜல்லிக்கட்டு பட இயக்குனர் - Jallikattu Director lijo jose upcoming with Actor suriya | Galatta

இந்தாண்டின் மிகப்பெரிய படமாக பெரும் எதிர்பார்ப்பின் மத்தியில் வெளியான படம் அஜித்தின் 'துணிவு' திரைப்படம்.  போனி கபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கிய துணிவு திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆதரவை பெற்று திரையில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் துணிவு திரைப்படத்தில் சண்டை காட்சி வடிவமைப்பாளராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் அவர்கள் நமது கலாட்டா தமிழ் பேட்டியில் கலந்து கொண்டு துணிவு படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

இதில் பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் லிஜோ ஜோஸ் - சூர்யா கூட்டணி குறித்து கேட்கையில் அவர்,

"லிஜோ சார் கண்டிப்பா தமிழ் திரையுலகத்திற்கு வருவாரு, முன்னதாக லிஜோ சார், சூர்யா சாருடன் படம் பண்ணுவது குறித்து பேசியிருக்கிறேன் என்று சொல்லியிருந்தார். கண்டிப்பா அவர் சூர்யா சாரோடு படம் பண்ணுவாரு னு நினைக்கிறேன். அப்பறம் விஜய் சேதுபதியிடமும் படம் குறித்து பேசியிருக்கிறார். அதுவும் நடக்கும்.. லிஜோ சார் இப்போ மலையாளத்தில நிறைய படம் எடுக்குறதால இங்க வர கொஞ்சம் நேரம் ஆகுது. அவருக்கு சூர்யா சார் னா ரொம்ப பிடிக்கும்.. அடிக்கடி அவர பற்றியும் அவருடன் படம் பண்ணுவது குறித்தும் என்னிடம் பகிர்ந்துள்ளார்.நீங்க பண்ணுங்க எங்களுக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும் என்று நானும் அவரிடம் சொல்வேன்.‌ கண்டிப்பா நடக்கும்னு நான் நினைக்குறேன்" என்று குறிப்பிட்டார்.

லிஜோ ஜோஸ் பெல்லிசேரி பிரபல மலையாள திரைப்படமான ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரீஸ்’, ‘சுருளி’ ஆகிய படங்களை இயக்கியவர். பெரும் கவனம் பெற்ற இவரது ஜல்லிக்கட்டு திரைப்படம் உலகளவில் வரவேற்பை பெற்றது. ஜல்லிக்கட்டு படத்திற்காக தேசிய விருதும் வாங்கியுள்ளார்.மேலும் இன்று திரையரங்குகளில் வெளியாகிருக்கும் மம்முட்டி நடித்த 'நண்பகல் நேரத்து மயக்கம்' என்ற திரைப்படத்தை இயக்கியவரும் இவரே என்பது குறிப்பிடத்தக்கது.

லிஜோவிற்கு மலையாளத்தில் மட்டுமல்லாமல் இந்தியளவில் அவருக்கும் அவரது படைப்புகளுக்கும் ரசிகர்கள் உள்ளது. குறிப்பாக தமிழ் ரசிகர்கள் சமீப காலமாக கொண்டாடி வருகின்றனர். சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் பிரம்மாண்டமான படத்தில் நடித்து வருகிறார். அதன் பின் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகவுள்ள  வாடிவாசல் திரைப்படத்தில் இணையவுள்ளார். அதன்பிறகு சூர்யா, லிஜோ ஜோஸுடன் இணைய வாய்ப்புள்ளது என தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

மேலும் பிரபல சண்டை வடிவமைப்பாளர் சுப்ரீம் சுந்தர் அவர்கள் துணிவு படம் குறித்தும் துணிவு பட சண்டை காட்சிகள் குறித்தும் பல சுவாரஸ்மான தகவல்களை பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..

1.30 நிமிஷம் single shot...! ஒரே Take ல் மிரட்டி விட்ட தளபதி விஜய் – ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி
சினிமா

1.30 நிமிஷம் single shot...! ஒரே Take ல் மிரட்டி விட்ட தளபதி விஜய் – ரஞ்சிதமே பாடல் குறித்து ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனி

‘இந்த combo புதுசா இருக்கே..’ - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்
சினிமா

‘இந்த combo புதுசா இருக்கே..’ - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகவுள்ள ரிவால்வர் ரீட்டா படத்தில் இணைந்த பிரபல காமெடி நடிகர்

 ‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..
சினிமா

‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..