அஜித்தின் வேதாளம் பட கெட்டப்பில் மாஸ் காட்டும் சிரஞ்சீவி – வைரலாகும் சிரஞ்சீவி லுக் இதோ..

அஜித்தின் வேதாளம் பட ரீமேக்கில் சிரஞ்சீவியின் புதிய லுக் வைரல் - Bola shankar chiranjeevi new look viral | Galatta

தமிழில் அஜித் – சிறுத்தை சிவா கூட்டணியில் உருவான திரைப்படம் 'வேதாளம்'. முன்னதாக ‘வீரம்’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த கூட்டணி 2015 வேதாளம் படத்திற்காக இணைந்தது. அண்ணன் தங்கை கதையை மையப்படுத்தி ஆக்ஷன் திரைப்படமாக உருவான வேதாளம் திரைப்படம் தீபாவளியைடுத்து வெளியாகியது. லஷ்மி மேனன், ஸ்ருதி ஹாசன், சூரி, அஷ்வின் காக்கமனு, ராகுல் தேவ், தம்பி ராமையா உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்தனர். மேலும் இசையமைப்பாளர்  அனிரூத் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். அனிரூத் இசையில் 'ஆலுமா டோலுமா' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்து கோலாகல கொண்டாட்டத்துடன் அஜித் ரசிகர்கள் படத்தை வரவேற்றனர். பாடல்கள் வரவேற்பை பெற்று அஜித்தின் மாறுபட்ட நடிப்பு அன்று ட்ரெண்ட் ஆனது. மக்களிடம் பெரிதளவு வரவேற்பை பெறாமல் கலவையான விமர்சனத்தையே வேதாளம் திரைப்படம் பெற்றது.  இருந்தாலும்  அந்த தீபாவளி அஜித் ரசிகர்களுக்கு மாஸான  தீபாவளியாகவே இருந்தது. அதன்பின் அஜித் - சிவா கூட்டணியில் தொடர்ந்து விவேகம், விஸ்வாசம் படம் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட வேதாளம் திரைப்படம் வெளியாகி இன்றோடு 8 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் வேதாளம் திரைப்படம் தெலுங்கில் 'போலா சங்கர்' என்ற பெயரில் தயாரிக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து விறுவிறுப்பாக படபிடிப்பு தொடங்கியது. அஜித் கதாபாத்திரத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி நடித்து வருகிறார். லஷ்மி மேனன் தங்கை கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் தமன்னா கதாநாயகியாக நடிக்கிறார். மஹதி சங்கர் இசையில் மேஹர் ரமேஷ் இப்படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில் போலா சங்கர் திரைப்படத்திற்கு நடிகர் சிரஞ்சீவி புதிய கெட்டப்பிற்கு மாறியுள்ளார். மிரட்டலான மொட்டை தலையுடன் சிரஞ்சீவியின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. நாளுக்கு நாள்  போலா சங்கர் திரைப்படத்திற்கு எதிர்பார்ப்பு கூடும் நிலையில் இந்த அப்டேட் ரசிகர்களை  மேலும் குதூகலப்படுத்தியுள்ளது.

 

varisu dop karthick palani about single take vijay performance in ranjithame songசமீபத்தில் சிரஞ்சிவி நடித்து வெளிவந்துள்ள 'வால்டர் வீரய்யா' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் பாக்ஸ் ஆபிஸ் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

 ‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..
சினிமா

‘வாத்தி கம்மிங்' பாணியில் வெளியான ‘Celebration Of Varisu ' - வாரிசு படத்தின் surprise song இதோ..

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..
சினிமா

“அஜித் சார் இந்த படத்தில் பாட வைக்கனும்னு ஆசை” – துணிவு பட இசையமைப்பாளர் ஜிப்ரான் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ –   ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.
சினிமா ஸ்பெஷல்ஸ்

வாரிசு வெற்றியை தொடர்ந்து 2 Years of ‘மாஸ்டர்’ – ரசிகர்கள் கொண்டாடி வரும் 5 காரணங்கள்.. சிறப்பு கட்டுரை இதோ.