பெட்ரோல் பங்கில் இருசக்கர வாகனத்திற்கு பெட்ரோல் போட்டுவிட்டு பணம் கொடுக்காமல் இரு இளைஞர்கள் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோவையில் தான் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறி, பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கோவை என்ஜி புதூர் அருகில் தனியாருக்கு சொந்தமான ஒரு பெட்ரோல் பங்க் ஒன்று செயல்பட்டு வருகிறது. 

இந்த பெட்ரோல் பங்கில், நேற்றிரவு 9.50 மணி அளவில் இருச்சர வாகனத்தில் 2 இளைஞர்கள் பெட்ரோல் போட வந்திருக்கிறார்கள். 

அதன் படி, அந்த இளைஞர்கள் “800 ரூபாக்கு பெட்ரோல் போட்ட வேண்டும்” என்று, அந்த இளைஞர்கள் கூறவே, அதன்படி, இங்கு பணியில் இருந்த பிரபாகரன் என்பவர், அந்த இருசக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்டு உள்ளார். 

இதனையடுத்து, அந்த இளைஞர்களிடம் அவர் பணம் கேட்டு உள்ளார். அப்போது, அந்த இரு இளைஞர்களும் பணம் கொடுக்காமல், அங்கிருந்து அடுத்த கனமே தப்பிச்செல்ல முயன்று உள்ளனர்.

இதனால், கடும் அதிர்ச்சியடைந்த ஊழியர் பிரபாகரன், அந்த இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த நபரின் கையை பிடித்து இழுத்து, வாகனத்தை நிறுத்த முயன்று, அந்த வாகனத்தின் பின்னாலேயே ஓடி உள்ளார். 

ஆனாலும், அவர்கள் இருவரும் அந்த பைக்கில் அதி வேகமாக தப்பித்து சென்று உள்ளனர். இதனால், அவர்களை துரத்திச் சென்ற பிரபாகரன், சற்று நிலைதடுமாறி அருகில் இருந்த தடுப்பில் மோதி விழுந்தார். அவருக்கு லேசான காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக அங்குள்ள துடியலூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், இது குறித்து விரைந்து வந்த போலீசார், வழங்குப் பதிவு செய்தனர்.

மேலும், சம்வம் நடைபெற்ற பெட்ரோல் பங்கில் பதிவாகி இருந்த சிசிடிவி காட்சி பதிவுகளின் ஆய்வு செய்து, பணம் கொடுக்காமல் தப்பியோடிய இரு இளைஞர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். 

இந்த நிலையில் தான், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள், தற்போது வெளியிட்டு உள்ளன. இது, அந்த பகுதியின் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

அதே போல், கடந்த மாதம் “புதுச்சேரியில் பெட்ரோல் நிரப்பி விட்டு பணம் தராமல் தப்பிச் சென்றவர்களை விரட்டி சென்ற பங்க் ஊழியரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் பறித்து சென்ற சம்பவத்தின சிசிடிவி காட்சிகளை வெளியாகி” பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதும் குறிப்பிடத்தக்கது.