கேரளாவை போல் பெங்களூருவிலும் “ஒய்ப் சாப்பிங்” குழு மூலமாக மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவித்து வந்த சம்பவம், கடும் அதிர்ச்சியையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

அதாவது, கேரள மாநிலத்தில் கோட்டயம் சங்கனாச்சேரியைச் சேர்ந்த குடும்ப பெண் ஒருவர், கடந்த மாதம் அங்குள்ள காவல் நிலையத்தில் ஒரு பரபரப்பான புகாரை அளித்தார். 

அந்த புகாரில், “எனது கணவர், என்னை மற்ற ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் படி வற்புறுத்துவதாக” பகிரங்கமாக குற்றம்சாட்டி இருந்தார். 

இது குறித்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணையில் இறங்கிய போது தான், பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தின. இதனால், இந்த வழக்கில் தொடர்ச்சியாக மொத்தம் 11 பேர் வரை கைது செய்யப்பட்டனர். இது குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், இதே போன்ற ஒரு சம்பவம் தற்போது பெங்களூருவிலும் அரங்கேறி இருப்பது கடும் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது.

அதாவது, “ஒய்ப் சாப்பிங்” என்கிற பெயரில் டிவிட்டர், இன்ஸ்டாகிராம், டெலகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் இந்த குழு செயல்பட்டு வந்திருக்கிறது. 

இந்த குழுவிற்கு வினய் என்கிற இளைஞர் மூளையாக செயல்பட்டது கண்டுப்பிடிக்கப்பட்டு, அந்த அளைஞரை போலீசார் தற்போது அதிரடியாக கைது செய்து உள்ளனர்.

அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

குறிப்பாக, “தங்களது மனைவிகளை மாற்றி உல்லாசம் அனுபவிக்க விரும்புவர்கள் மட்டும் இந்த குழுவில் உறுப்பினர்களாக இணைந்து உள்ளனர். 

அதுவும், தம்பதி மற்றும் பெண்கள் பலரது புகைப்படங்கள் குறித்த விவரங்கள் இந்த குழுவில் அதிகம் பகிரப்பட்டு வந்திருக்கின்றன. 

மிக முக்கியமாக, “தங்களுக்கு விருப்பமான பெண்களை தேர்வு செய்து, அவர்களுடன் உல்லாசம் அனுபவிக்கலாம்” என்பதற்காகவே, இந்த குழு உருவாக்கப்பட்டது தெரிய வந்திருக்கிறது.

அதே போல், “மற்றவரின் மனைவியை உல்லாசத்திற்கு அனுபவிக்க கேட்கும் அந்த நபரும், தனது மனைவியை பிறருடன் உல்லாசம் செய்ய அனுமதிக்க வேண்டும்” என்பது, இந்த குழுவின் விதிமுறையாக இருந்திருக்கிறது. 

“அப்படி தனது மனைவியை பிறருடன் அனுமதிக்கவில்லை என்றால், அந்த நபர் இந்த குழுவை விட்டு நீக்கப்படுவார்” என்றும், கூறப்படுகிறது.

இப்படியான, இந்த மோசமான இந்த குழு பற்றிய முழு விபரங்களும் பெங்களூரு தெற்கு மண்டல போலீசாருக்கு கிடைத்த நிலையில், தெற்கு மண்டல போலீசார் நடவடிக்கை எடுக்கும்படி சைபர் கிரைம் போலீசாருக்கு அதிரடியாக உத்தரவிட்டனர்.    

அதன்படியே, போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். 

இந்த நிலையில்தான் “ஒய்ப் சாப்பிங்” ன் குழுவிற்கு பெரும் மூளையாக செயல்பட்ட வினய் என்பவனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.

அவனிடம் முதற்கட்ட விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில், அடுத்த கட்ட விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

குறிப்பாக, கைது செய்யப்பட்டுள்ள வினய், பெங்களூருவில் உள்ள பிரபல எலக்ட்ரானிக் கடையில் வேலை செய்து வந்தது தெரிய வந்திருக்கிறது. 

இந்த இளைஞரும், அவரது மனைவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ஆவர்.

அதன்படி, முதலில் தனது மனைவியை வைத்து இவர் இந்த குழுவை தொடங்கி செயல்படுத்தி வந்திருக்கிறார். 

அதற்கு, போக போக நல்ல வரவேற்பும், அதிகப்படியான பணமும் கிடைக்கவே, அதன் பிறகு மேலும் சிலரை இந்த குழுவில் அவர் இணைத்து உள்ளார்.

அதன் படி, கணவரின் கண் எதிரிலேயே மனைவி வேறு ஒரு ஆணுடன் உல்லாசமாக இருப்பதும், ஒரே அறையில் பலர் ஜோடியாக உல்லாசம் அனுபவிப்பதும் இந்த குழுவின் முக்கிய அம்சம்” என்றே, கைது செய்யப்பட்டுள்ள வினய், தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.