இந்திய திரை உலகின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களின் மகள் அதிதி ஷங்கர் தற்போது தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார். நடிகர் சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் விருமன் படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பிரகாஷ்ராஜ், ராஜ்கிரண் & சூரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இப்படத்திற்கு செல்வகுமார்.S.K ஒளிப்பதிவு செய்ய, யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்கிறார். விருமன் திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று சமீபத்தில் நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே நடிகை அதிதி ஷங்கர் பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார். தெலுங்கில் இயக்குனர் கிரண் கொரப்படி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் வருண் தேஜ் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கானி. ஜெகபதி பாபு, உபேந்திரா, சுனில் ஷெட்டி, நவீன் சந்திரா & நதியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள கானி படத்திற்கு ஜார்ஜ.C. வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்ய தமன்.S இசையமைத்துள்ளார்.

வருகிற பிப்ரவரி மாதம் கானி திரைப்படம் ரிலீஸாக உள்ள நிலையில் இப்படத்தில் இசையமைப்பாளர் தமன்.S இசையில் நடிகை அதிதி ஷங்கர், தெலுங்கில் ஒரு பாடல் பாடியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். ரோமியோ ஜூலியட் என்னும் இந்த பாடல் வருகிற பிப்ரவரி 8ஆம் தேதி ரிலீஸாக உள்ளது குறிப்பிடத்தக்கது.