இந்திய திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான தயாரிப்பாளர் போனி கபூரை அவர்களின் பேவியூ பிராஜக்ட்ஸ் தயாரிப்பில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் வலிமை. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருக்கும் வழிமுறையை படத்தை இயக்குனர் H.வினோத் இயக்கியுள்ளார்.

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் வெளியீடாக வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலால் விதிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து பிப்ரவரி 24ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் அஜித்குமாரின் வலிமை படம் ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் அடுத்ததாக போனி கபூர் தயாரிப்பில் வெளிவர உள்ள திரைப்படம் நெஞ்சுக்கு நீதி. நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தை நடிகர் பாடலாசிரியர் இயக்குனர் என பன்முக தன்மை கொண்ட கலைஞராக வலம் வரும் அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார்.

பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ஆர்டிகல் 15 படத்தின் தமிழ் ரீமேக்காக வெளிவரும் நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார் உதயநிதி. கதாநாயகியாக தான்யா ரவிச்சந்திரன் நடிக்க, ஆரி அர்ஜுனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நெஞ்சுக்கு நீதி படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில், திபு நினன் தோமஸ் இசையமைத்துள்ளார்.

இன்று (பிப்ரவரி 6ஆம் தேதி) நெஞ்சுக்கு நீதி திரை படத்தின் டீஸர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்திய திரையுலகின் மெல்லிசை மகாராணியான பின்னணி பாடகி "கானக் குயில்" லதா மங்கேஷ்கரின் மறைவை அனுசரிக்கும் விதமாக நெஞ்சுக்கு நீதி டீசர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். விரைவில் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் இதர அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.