விஜய் தொலைக்காட்சியின் ஃபேவரட் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது பிக்பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் வகையில் நேரடியாக ஹாட்ஸ்டார் தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இதுவரை நடைபெற்ற சீசன்களில் பிக் பாஸ் சீசன் 1-லிருந்து  சினேகன், சுஜா வருணி, ஜூலி, பிக் பாஸ் சீசன் 2-லிருந்து தாடி பாலாஜி, ஷாரிக், பிக் பாஸ் சீசன் 3-லிருந்து வனிதா விஜயகுமார், அபிராமி வெங்கடாச்சலம், பிக் பாஸ் சீசன் 4-லிருந்து அனிதா சம்பத், பாலாஜி முருகதாஸ், சுரேஷ் சக்கரவர்த்தி & பிக் பாஸ் சீசன் 5-லிருந்து நிரூப்  நந்தகுமார், அபிநய், தாமரைச்செல்வி, சுருதி  என 14 போட்டியாளர்கள் பிக் பாஸ் அல்டிமேட்டின் ஹவுஸ் மேட்ஸ்களாக களமிறங்கியுள்ளனர்.

பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் வாரத்தின் கேப்டனாக ஷாரிக் தேர்வு செய்யப்பட்டார். தொடக்கத்திலேயே அனல்பறக்கும் விதமாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி நகர ஆரம்பித்தது. குறிப்பாக நடைபெற்ற செலிபிரிட்டி இன்டர்வியூ டாஸ்க் மிகக் காரசாரமான விவாதங்களோடு நடைபெற்று நிறைவடைந்தது. தொடர்ந்து முதல் வாரத்திற்கான நாமினேஷன் ப்ராசஸ் நடைபெற்றது.

இந்த நாமினேஷனில் நிரூப், அனிதா சுருதி ஜூலி சினேகன் வனிதா அபிநய் மற்றும் சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் நாமினேட் செய்யப்பட்டனர் இந்நிலையில் பிக் பாஸ் அல்டிமேட்டின் முதல் EVICTION-ல் சுரேஷ் சக்கரவர்த்தி பிக்பாஸ் அல்டிமேட் வீட்டை விட்டு வெளியேறி உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன இன்றைய(பிப்ரவரி 6) நிகழ்ச்சியில் சுரேஷ் சக்ரவர்த்தி வெளியேறுவது ஒளிபரப்பாகும்.