தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகராகவும் அனேக ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் சிலம்பரசன்.T.R தனது திரைப்பயணத்தில் 2-வது இன்னிங்சை கடந்த 2021 பொங்கல் வெளியீடாக வெளிவந்த ஈஸ்வரன் திரைப்படத்திலிருந்து தொடங்கினார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் சிலம்பரசன் T.R-க்கான சிறந்த கம்பேக்காக வெளிவந்தது மாநாடு திரைப்படம்.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்களின் வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த மாநாடு திரைப்படத்தில் கதாநாயகனாக சிலம்பரசன் நடிக்க, நடிகர் S.J.சூர்யா மிரட்டலான வில்லனாக அசத்தியிருந்தார். ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், பிரவீன்.K.L படத்தொகுப்பு செய்த மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

அடுத்ததாக 3-வது முறையாக கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஏ.ஆர்.ரஹ்மானுடன் இணைந்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துவரும் சிலம்பரசன்.T.R தொடர்ந்து இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து பத்து தல திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இதனை அடுத்து இயக்குனர் கோகுல் இயக்கத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் தயாரிப்பில் கொரோனா குமார் படத்தில் நடிக்க இருக்கிறார்.

முன்னதாக வெளிவந்த மாநாடு திரைப்படம் பல தடைகளையும் தாண்டி ரசிகர்களை வந்தடைந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டர் ஆனதோடு, திரையரங்குகளில் 75 நாட்களை வெற்றிகரமாக கடந்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மாநாடு திரைப்படத்தின் புதிய மேக்கிங் வீடியோ தற்போது வெளியானது. கலக்கலான அந்த மேக்கிங் வீடியோ இதோ…