12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ள நிலையில், தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டம் முதலிடமும், வேலூர் மாவட்டம் கடைசி இடமும் பெற்று உள்ளது.

சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு கூட்ட அரங்கில் இன்று காலை 10 மணி அளவில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். 

என்றாலும், “மாணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள www.tnresults.nic.in, www.dge1tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய அரசின் இணைய தள பக்கங்களிலும் தெரிந்து கொள்ளலாம்” என்றும், அறிவிக்கப்பட்டு உள்ளது. 

அதன்படி, இணைய தளத்தில் மாணவர்கள் தங்களது தேர்வு எண், பிறந்த தேதி ஆகியவற்றை பதிவு செய்து தேர்வு முடிவகளை அறிந்து கொள்ளலாம் என்றும், கூறப்பட்டு உள்ளது. 

அதன்படி, தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 9.12 லட்சம் பேர் எழுதி இருந்த நிலையில், இவர்களில் கிட்டதட்ட 8.21 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள்.

இதன் மூலம் 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி சதவிகிதம் என்பது 93.76 சதவீதமாக உள்ளது. 

அத்துடன், 12 ஆம் வகுப்பு தேர்வில் வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று உள்ளனர். 12 ஆம் வகுப்பில் மாணவர்களை விட, மாணவிகள் 5.36 சதவீதம் கூடுதலாக தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். 

மேலும், 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளில் தமிழ்நாட்டிலேயே பெரம்பலூர் மாவட்டத்தில் 97.95 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்து உள்ளனர். 

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டிலேயே விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 97.27 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று2 வது இடம் பிடித்து உள்ளனர்.

அதே போல், 97.02 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று, ராமநாதபுரம் மாவட்டம் 3 வது இடம் பிடித்து உள்ளது. 

குறிப்பாக, தேர்சி விகிதத்தில் தமிழ்நாட்டிலேயே வேலூர் மாவட்டம் கடைசி இடம் பிடித்து உள்ளது.

12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் வணிகவியல் பாடத்தில் 4,634 மாணவர்கள் 100/100 மதிப்பெண்கள் பெற்று உள்ளனர். 

அதே போல், கணக்குப் பதிவியல் பாடத்தில் 4,540 மாணவர்கள் 100/100 மதிபெண்கள் பெற்று உள்ளனர்.

கணினி அறிவியல் பாடத்திலும் 3,827 மாணவர்கள் 100/100 மதிபெண்கள் பெற்று உள்ளனர். 

முக்கியமாக, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 2,824 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த முறை தேர்ச்சி பெற்று உள்ளனர். 

மிக முக்கியமாக, வரும் 24 ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்  அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

அதே போல், பொதுத் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு வரும் ஜூலை, ஆகஸ்டில் உடனடி தேர்வு நடைபெற இருக்கிறது. அதன்படி, 12 ஆம் வகுப்பிற்கு ஜூலை 25 ஆம் தேதி முதல் உடனடி தேர்வு தொடங்கும் என்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து உள்ளார்.