தொடரந்து படத்திற்கு படம் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சமீபத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் நடித்து வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட்டான விக்ரம் படத்தில் சந்தனம் எனும் கதாபாத்திரத்தில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.

அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்து வரும் விஜய் சேதுபதி பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் உடன் இணைந்து மேரி கிறிஸ்மஸ் எனும் ஹிந்தி படத்திலும் மாநகரம் படத்தின் ஹிந்தி ரீமேக்காக தயாராகியுள்ள மும்பைகர் படத்திலும்  அதிதி ராவ் ஹைதாரி உடன் இணைந்து காந்தி டாக்ஸ் எனும் மௌன படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக ஃபேமிலி மேன் வெப்சீரிஸ் இயக்குனர்களின் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஷாஹீத் கபூர் இணைந்து முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள ஃபர்ஸி வெப்சீரிஸ் விரைவில் அமேசான் ப்ரைம் வீடியோவில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். 

YSR  புரோடக்சன் சார்பில் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ள மாமனிதன் படத்திற்கு இசைஞானி இளையராஜா ,யுவன் ஷங்கர் ராஜா மற்றும் கார்த்திக் ராஜா இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்டுடியோ 9 நிறுவனம் வெளியிட வருகிற ஜூன் 24ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்நிலையில் மாமனிதன் திரைப்படத்தின் புதிய ப்ரோமோ வீடியோ தற்போது வெளியானது. அந்த ப்ரோமோ வீடியோ இதோ…
 

. @seenuramasamy ‘s #Maamanithan from June 24#MaamanithanFromJune24@ilaiyaraaja & @thisisysr Musical

A @studio9_suresh Release @YSRfilms @SGayathrie @shajichen @jewelmary5 @pavijaypoet @mynnasukumar @sreekar_prasad @U1Records @RapsPrasaath @Kumar12Mohinesh @DirRajshekar pic.twitter.com/dOXDDqfnAk

— VijaySethupathi (@VijaySethuOffl) June 19, 2022