தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராக தனக்கே உரித்தான பாணியில் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்தவர் இயக்குனர் செல்வராகவன். அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இயக்குனர் செல்வராகவன் மற்றும் நடிகர் தனுஷ் கூட்டணியில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் நானே வருவேன்.

தயாரிப்பாளர் கலைப்புலி.S.தாணு அவர்களின் V கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள நானே வருவேன் திரைப்படத்தில் இளையதிலகம் பிரபு, யோகி பாபு, இந்துஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ள நானே வருவேன் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

சமீபத்தில் நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் தற்போது நடைபெற்று வருகின்றன. முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த புதுப்பேட்டை மற்றும் ஆயிரத்தில் ஒருவன் ஆகிய 2 திரைப்படங்களும் ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற நிலையில், இந்த இரண்டு திரைப்படங்களின் பார்ட் 2 படங்களுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்வராகவன் புதுப்பேட்டை 2 மற்றும் ஆயிரத்தில் ஒருவன் 2 ஆகிய இரண்டு திரைப்படங்களும் விரைவில் தொடங்கப்படும் என்று முதலில் புதுப்பேட்டை 2 திரைப்படம் தொடங்கப்படும் என்றும் அடுத்ததாக ஆயிரத்தில் ஒருவன் 2 தயாராகும் என்றும் அறிவித்துள்ளார். இயக்குனர் செல்வராகவன் செய்தியாளர்களிடம் பேசிய அந்த வீடியோ இதோ…

#Video | "ஆயிரத்தில் ஒருவன் - 2, புதுப்பேட்டை - 2 படங்கள் எப்போது வரும்?" - அப்டேட் கொடுத்த இயக்குநர் செல்வராகவன்!#Sunnews | #AayirathilOruvan | @selvaraghavan | #Pudhupettai pic.twitter.com/mSZhjoHHD9

— Sun News (@sunnewstamil) June 19, 2022