தமிழ் திரை உலகின் குறிப்பிடப்படும் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் அடுத்ததாக சாதனை முயற்சியாக உலகிலேயே முதல் முறை ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ள திரைப்படம் இரவு நிழல். இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் அடுத்தடுத்து தமிழ்த் திரையுலகில் பல படங்களில் நடித்து வரும் பார்த்திபன், இயக்குனர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இந்தியத் திரையுலகில் இதுவரை இல்லாத பிரம்மாண்ட பொருட்செலவில் தயாராகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் சின்னப் பழுவேட்டரையர் எனும் மிக முக்கிய கதாபாத்திரத்திலும், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்துள்ள துருவநட்சத்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

இந்த வரிசையில் அடுத்ததாக பிரபல இளம் நடிகர் கௌதம் கார்த்திக் உடன் இணைந்து இயக்குனர் பார்த்திபன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் யுத்த சத்தம். இதுவரை தமிழ்த் திரையுலகில் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதை தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், தீபாவளி, மனம் கொத்திப் பறவை, தேசிங்கு ராஜா என பல சூப்பர் ஹிட் ஃபேமிலி என்டர்டெய்னிங் படங்களைக் கொடுத்த இயக்குனர் எழில் இயக்கத்தில் வித்தியாசமான த்ரில்லர் திரைப்படமாக தயாராகியுள்ளது யுத்த சத்தம் திரைப்படம்.

கல்லால் குளோபல் என்டர்டெயின்மென்ட் மற்றும் MKRP புரோடக்சன்ஸ் இணைந்து வழங்கும் யுத்த சத்தம் திரைப்படத்தில், சாய்பிரியா கதாநாயகியாக நடிக்க ரோபோ ஷங்கர், மனோபாலா, வையாபுரி, சாம்ஸ், அஸ்வின் ராஜா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குருதேவ் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு டி.இமான் இசை அமைத்துள்ளார்.

இந்நிலையில் யுத்த சத்தம் படத்தின் விறுவிறுப்பான ட்ரைலர் தற்போது வெளியானது. சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள யுத்த சத்தம் படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்.